இடுகைகள்

ஆளுநர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரௌபதி முர்மு - முழுமையான தகவல் தொகுப்பு

படம்
  திரௌபதி முர்மு  சந்தால் பழங்குடிப் பெண்மணியான திரௌபதி முர்மு, இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவை வென்றார். இந்த வெற்றி மூலம் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடி பெண், இரண்டாவது பெண்மணி என இரு சாதனைகளைச் செய்துள்ளார்.  பெயர்: திரௌபதி முர்மு பிறப்பு: 1958, ஜூன் 20ஆம் தேதி பிறந்த இடம்: உபர்பேடா, மாயூர்பன்ஞ், ஒடிஷா வயது: 64 உயரம்: 164 செ.மீ. எடை: 74 கி.கி. பெற்றோர்: பிரான்ச்சி நாராயண் துடு (Biranchi Narayan Tudu) கல்வி கற்ற இடம்:  யூனிட் 2 உயர்நிலைப்பள்ளி; 1979ஆம் ஆண்டு ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகம் (பி.ஏ.), புவனேஸ்வர், ஒடிஷா  கல்விப்பணி:  உதவி பேராசிரியர், ஸ்ரீ அரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகம், ராய்ரங்பூர்; இளநிலை உதவியாளர், நீர்ப்பாசனத்துறை, ஒடிஷா மாநில அரசு (1979-1983) அரசியல் நுழைவு: 1997, பாரதிய ஜனதா கட்சி (ராய்ரங்பூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்); பஞ்சாயத்து தலைவர் (2000) வகித்த அரசு பதவிகள் : ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் (2015), ஒடிஷாவின் மீன்வளம் மற்றும் விலங்குநலத்துறை அமைச்சர்

தலைநகரான டெல்லியை சட்டங்களால் குதறும் மத்திய அரசு! - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊதாசீனப்படுத்தப்படும் வரலாற்று களங்கம்!

படம்
          ஆம் ஆத்மி - அரவிந்த் கெஜ்ரிவால்     மத்திய அரசு, மெல்ல தனது கட்சி ஆட்சியில் இல்லாத அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாநில உரிமைகள் மெல்ல பறிபோகத்தொடங்கியுள்ளன. இதில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள மாநிலங்கள் கூட விதிவிலக்கின்றி அனைத்து சமாச்சாரங்களும் டெல்லி மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரே பிரதமர் ஒரே நாடு என்று கூறும்படி பிற அதிகாரிகள், ஏன் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் கூட செல்லாக்காசு நிலைக்கு மாறி வருகிறார்கள்.   இதற்கு சாட்சிதான் அண்மையில் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் இதன் காரணமாக அங்கு மக்களால் தேர்ந்தெடுக்ககப்பட்டு ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசுக்கு இனி எந்த அதிகாரங்களும் இருக்காது. வகுப்பறையில் இருக்கும்போது பாத்ரூம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போலவே சாலை, கல்வி, மருத்துவம் என அனைத்து விஷயங்களூக்கும் ஆளுநரின் தலையசைப்பிற்கு யூனியன் பிரதேச முதல்வர் காத்திருக்க வேண்டி வரும்.  அதன் பொருள், இனிமேல் அங்கு தேர்தல் தேவையில்லை

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற

மூத்த குடிமகன்களுக்கான வட்டி குறைவது இயல்பானதுதான்!

படம்
சக்தி காந்த தாஸ் ஆர்பிஐ ஆளுநர் கரன்சி செயல்பாடு புதிய எல்லையைத் தொட்டுள்ளது? சதவீத அளவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு குறைந்தளவே மக்களிடம் புழங்கி வருகிறது. வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் ரூபாயின் புழக்கம் மக்களிடம் அதிகமாகத்தான் இருக்கிறது. இது விரைவில் குறையும் என நம்புகிறேன். வட்ட சதவீதம் குறைந்தால் அது மூத்தவர்களுக்கு பாதகமாகும் என்பதை அறிந்துள்ளீர்களா? பணவீக்கம் குறையும் போது வட்டி சதவீதமும் குறைவது வழக்கமானதுதான். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும்போது வட்டி எட்டு சதவீதமாக இருக்கும். அது குறையும்போது வட்டி 4 சதவீதமாக குறைவது இயல்புதானே! வெளிநாடுகளிலும் கூட இந்திய கடன் பத்திரங்களை வாங்க முடியும் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்களே? நாங்கள் அரசு கடனை நிர்வாகம் செய்யும் மேலாண்மை அமைப்பு மட்டுமே. அதை மட்டுமே செய்கிறோம். கடன், வட்டி பிரச்னைகளை குறித்து அரசுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். அரசின் வேறு முடிவுகளை பற்றி நாங்கள் பதில் கூறமுடியாது. முழுக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை சரியாக செயல்படுகிறதா? நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதே? அவ