திரௌபதி முர்மு - முழுமையான தகவல் தொகுப்பு

 












திரௌபதி முர்மு 



சந்தால் பழங்குடிப் பெண்மணியான திரௌபதி முர்மு, இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவை வென்றார். இந்த வெற்றி மூலம் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடி பெண், இரண்டாவது பெண்மணி என இரு சாதனைகளைச் செய்துள்ளார். 

பெயர்: திரௌபதி முர்மு

பிறப்பு: 1958, ஜூன் 20ஆம் தேதி

பிறந்த இடம்: உபர்பேடா, மாயூர்பன்ஞ், ஒடிஷா

வயது: 64

உயரம்: 164 செ.மீ.

எடை: 74 கி.கி.

பெற்றோர்: பிரான்ச்சி நாராயண் துடு (Biranchi Narayan Tudu)

கல்வி கற்ற இடம்:  யூனிட் 2 உயர்நிலைப்பள்ளி; 1979ஆம் ஆண்டு ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகம் (பி.ஏ.), புவனேஸ்வர், ஒடிஷா 

கல்விப்பணி:  உதவி பேராசிரியர், ஸ்ரீ அரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகம், ராய்ரங்பூர்; இளநிலை உதவியாளர், நீர்ப்பாசனத்துறை, ஒடிஷா மாநில அரசு (1979-1983)

அரசியல் நுழைவு: 1997, பாரதிய ஜனதா கட்சி (ராய்ரங்பூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்); பஞ்சாயத்து தலைவர் (2000)

வகித்த அரசு பதவிகள் : ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் (2015), ஒடிஷாவின் மீன்வளம் மற்றும் விலங்குநலத்துறை அமைச்சர் (ஆகஸ்ட் 6,2002- மே 16, 2004), வணிக போக்குவரத்துதுறை அமைச்சர் (மார்ச் 6,2000 - ஆகஸ்ட் 6, 2000), ராய்ரங்பூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ (2000-2007 வரை) 

இணைந்துள்ள அரசியல் கட்சி: பாரதிய ஜனதா கட்சி

கணவர்: ஷியாம் சரண் முர்மு (பேங்க் ஆஃப் இந்தியா பணியாளரான ஷியாம், 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்)

கணவரின் ஊர்: பகத்பூர் (மர்முவின் ஊரான உபர்பெடாவிலிருந்து 10 கி.மீ. தொலைவு)

பிள்ளை: மூன்று பிள்ளைகள் (இரு ஆண், ஒரு பெண்) இரு மகன்களும்(லக்ஷ்மண் (2009 அக்டோபர் 25ஆம் தேதி), சிபுன் (2013 ஜனவரி 2)) காலமாகிவிட்டனர். மகள்  இடிஸ்ரீ மர்மு, யூகோ வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார். 

இடிஸ்ரீ மர்முவின் கணவர் பெயர்: கணேஷ் சந்திர ஹெம்பிராம் (ரக்பி விளையாட்டு வீரர்)

திருமணமான ஆண்டு: 2015ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி

பிள்ளை: ஒரு மகள் (ஆத்யாஸ்ரீ மர்மு)

தொடங்கிய பள்ளி: ஷியாம், லஷ்மண், சிபுர் உறைவிடப்பள்ளி (பழங்குடி சிறுமிகளுக்கானது)

உணவுப்பழக்கம்: சைவம்

பிடித்த உடை: சேலை

பின்பற்றும் பழக்கம்: பிரம்மகுமாரிகளின் தியான முறை

பொழுதுபோக்கு: வலைப்பூ, கவிதை எழுதுவது

பிடித்த தலைவர்கள்: அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி

பிடித்த உணவு: அரிசா பிதா (Arisa Pitha) அரிசி, வெல்லம், எள், நெய், ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  

சமூகப்பணி: 100 முறை ரத்த தானம் செய்தவர், 1000 மரக்கன்றுகளை நட்டுள்ளார். 

பெற்ற விருது: நீல்காந்தா விருது (2007ஆம்ஆண்டு, ஒடிஷா சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட எம்எல்ஏ என்பதற்காக...)

சொத்துமதிப்பு: ரூ.9.5 லட்சம்

குடியரசுத்தலைவராக பேசிய உரை: ’சுதந்திர இந்தியாவில் பிறந்து, தற்போது  நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ஆகியுள்ளேன். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர போராடிய வீரர்கள் போல நாம் காணும் கனவுகளை நிஜமாக்க உழைத்தால் வெற்றி பெறலாம்” 

கூடுதல் தகவல்கள்

விவசாயியான தந்தை பிரான்ச்சி துடு மற்றும் தாத்தா நாராயண் துடு ஆகியோர் கிராம பஞ்சாயத்து தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 

ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்ற முதல் சந்தாலி பழங்குடி  பெண் தலைவர், திரௌபதி மர்மு.  2017ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில அரசு, அங்கு வாழும் பழங்குடிகளின் நிலங்களை வணிக ரீதியாக பயன்படுத்த வகை செய்யும் மசோதா ஒன்றை உருவாக்கியது. ஆனால் ஆளுநர் திரௌபதி மர்மு, அதனை ஏற்க மறுத்துவிட்டார்.  இந்த மசோதா, பழங்குடிகளுக்கு சொந்தமான நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்த உரிமை அளிக்கிறது. அதேநேரம் நிலத்தின் உரிமை பழங்குடி மக்களிடமே இருக்கும். 

பிரனாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்காலம் (2012-2017) நிறைவுற்றபோது, திரௌபதி மர்முவின் பெயர் அடுத்து குடியரசுத்தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருந்தது. 



Keep lofty goals in mind, but plan to achieve them  with small success


https://www.jagranjosh.com/general-knowledge/draupadi-murmu-biography-1658380804-1 

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/heres-is-all-you-need-to-know-about-droupadi-murmu-bjps-presidential-pick/articleshow/92369007.cms?from=mdr

https://indianexpress.com/article/india/draupadi-murmu-10-things-to-know-about-ndas-presidential-nominee-7982963/

https://www.nationalheraldindia.com/national/inside-draupadi-murmus-world-passionate-teacher-disciplinarian-vegetarian

https://www.thehindu.com/news/national/profile-the-importance-of-being-draupadi-murmu/article65550479.ece

https://starsunfolded.com/itishree-murmu/

https://www.teknikalraman.com/who-is-itishri-murmu-meet-draupadi-murmu/

https://starsunfolded.com/shyam-charan-murmu/

https://bihar-cetbed-lnmu.in/draupadi-murmu/

https://www.firstpost.com/politics/indias-only-tribal-president-droupadi-murmu-boasts-of-many-firsts-10939741.html

https://currentaffairs.adda247.com/draupadi-murmu-president/

https://openthemagazine.com/cover-stories/draupadi-murmu-rising-from-below/

https://www.dnaindia.com/india/report-droupadi-murmu-not-my-real-name-know-who-gave-the-new-president-her-first-name-and-why-2971297

https://economictimes.indiatimes.com/news/india/draupadi-murmu-all-you-need-to-know-about-bjps-presidential-candidate/many-firsts/slideshow/92386679.cms

https://www.yourselfquotes.com/web-stories/draupadi-murmu-quotes/


திரௌபது முர்மு என மாற்றிப்படியுங்கள்.....


சிறப்பு பக்கம் என்று சொல்லி உருவாக்கிய பக்கத்திற்கான புரோஃபைல் இது. நினைத்தபடி பத்திரிகையில் சிறப்பாகவெல்லாம் உருவாகவில்லை.  படு சுமாராக உருவானது. பக்கத்தை வடிவமைத்தவர் இதழின் வடிவமைப்புக் குழுவின் தலைவர் வேறு. அதாவது Cheap designer ***************************. ஸ்பெல்லிங் மிஸ்டேக் என நினைக்காதீர்கள், காவாலனே சேஸ்தா.......



கருத்துகள்