தீக்கதிரை வாசிக்க கொடுக்கும் கேரள சேட்டன்! கடிதம் - கதிரவன்
10.10.2021
மயிலாப்பூர்
அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் போனில் பேசியது மகிழ்ச்சி. நான் இப்போது அலுவலக வேலைகளைச் செய்துவிட்டு என்னுடைய வலைப்பூவை எழுதிக்கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைப்பதுதான் காரணம். அலுவலகத்திற்கு அருகிலுள்ள டீக்கடையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தீக்கதிர் நாளிதழ் கிடைக்கிறது. இதை கடைக்காரரே வாங்கிப் போடுகிறார். அதை பெரும்பாலும் படிப்பதே நான்தான். அவர் மாத்ருபூமி வாங்கிப் படிக்கிறார். விலை ஏழு ரூபாய். மலையாளம் படிக்க பேச அறிந்தவர். ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது.
மாலையில் 3 மணிக்கு டீகுடித்தபடி தீக்கதிர் நாளிதழ் படிப்பது வழக்கமாகி விட்டது. டெய்லி புஷ்பம் வெளியில் பத்திரிகை விற்கிறதோ இல்லையோ ஊழியர்களுக்கு நாளிதழை வலுக்கட்டாயமாக போட்டு நிறைய சம்பாதிக்கிறது. இது என்ன ராஜதந்திரம் என எனக்கு புரியவில்லை. நான் டெய்லி புஷ்பத்தை படிப்பதில்லை. பக்கத்து அறை ஐயர் படித்தபிறகு கொண்டு வந்து தருவார். அப்படியே வாங்கி எடைக்கு போட்டுவிடுவேன்.
பிரன்ட்லைன் இதழில் மோடியின் பிரிவினைவாதம் பற்றிய கட்டுரை ஒன்றை படித்து வருகிறேன். நன்றி!
அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக