தன் குடும்பத்தை நிர்மூலமாக்கியவர்கள் பஞ்ச பூதங்கள் மூலம் கொல்லும் நாயகனின் கதை! - சாட்சியம் - ஸ்ரீவாஸ்
சாட்சியம்
தெலுங்கு
பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ், வெண்ணிலா கிஷோர்
தலைப்பில் சொன்னதுதான். கிராமத்தில் சகல சௌக்கியங்களோடு வாழும் சரத் குமார். பசுக்களை அடித்து பிடித்து வாங்கி கறிக்கடைக்கு விற்கும் ஜெகதி பாபு சகோதரர்களை பகைத்துக்கொள்கிறார். பசு ஒன்றையும், அதன் கன்றுக்குட்டியையும் காப்பாற்றுகிறார். இதன் விளைவாக முழு குடும்பத்தையும் ஜெகதி பாபு வெட்டிக்கொல்கிறார். இதில் பிழைப்பது ஒரே ஒரு குழந்தை மட்டுமே. அதனை கன்றுக்குட்டி ஒன்று காப்பாற்றுகிறது. அந்த குழந்தை சிவன் கோவிலில் கிடக்கிறது. அதை குழந்தையில்லாத தம்பதியினர் எடுத்து வளர்க்கிறார்கள்.
பிறகு கதை அமெரிக்காவில் நடைபெறுகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிதாகிறது அதுதான் நாயகன் பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ்.
ஜெகதி பாபு சகோதரர்களின் குற்றங்கள் நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதனை எதிர்ப்பவராக உள்ளவர் ஊரில் ஒருவர்தான். அவர்தான் ராவ் ரமேஷ். அவரையும் லாரி மூலம் மோதி கொல்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. அதிலும் அவர் பிழைக்கிறார். அவரின் மகள் தான் நாயகி. நாயகியை சந்திப்பதற்காக நாயகன் கிராமத்திற்கு வர வில்லன்களை சந்திக்கிறார். அப்போதும் கூட அவரது குடும்பத்தை ஜெகதிபாபு சகோதரர்கள் தான் முழுக்க அழித்தார்கள் என்பது தெரியாது. ஆனால், காதலிக்கு ஏதோ ஆபத்திருக்கிறது என்பதை உணர்கிறார். அதனால் யோசிக்காமல் எதிரிகளை அடித்து உதைக்கிறார். இப்படியே பயணித்து தனக்கு நேரடியாக தொடர்பில்லாத வில்லன்களை பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்து கொன்று தீர்க்கிறார்.
படத்தில் சண்டைக்காட்சியை சற்று பொயப்பட்டி சீனு போல மிகையாக வைத்திருக்கலாம். உணர்ச்சிகரமான காட்சிகளும் சண்டைக்காட்சிகளுக்கு முன்னர் இருப்பதில்லை. இதனால், வில்லன்களை அடிக்கும்போது அது வெற்று காட்சிகளாகவே மிஞ்சுகிறது. எந்த உணர்வையும் ஏற்படுத்துவதில்லை. காதல், குடும்ப பாசம் என பல்வேறு விஷயங்களை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பசியோடு இருப்பவன் பிரியாணியைப் பார்ப்பது போலவே பெல்லகொண்டா ஸ்ரீனிவாஸ் எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார். இதனால் கதைக்கும் அதில் இவர் என்ன செய்கிறார் என்பதும் நமக்கு ஏதும் புரிவதில்லை.
படத்தில் காதலுக்கு பெரிய இடமில்லை. இருந்தாலும் இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் நினைத்து பூஜா ஹெக்டேவை நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் அது மட்டுமே உருப்படியான விஷயம். அவரை பார்க்கும் நேரம் மட்டுமே சற்று ஆறுதலாக இருக்கிறது.
ஆன்மிக பாடம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக