பன்னீர் சோடா வாங்கித்தரும் பாக்கியத்தை அருளிய எழுத்தாளர்! - கடிதங்கள் - கதிரவன்

 

 

 

 Free photos of Suit

 

 

 

ஆண் வாரிசுதான் எல்லாமே!

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.

நலமா|? நேற்று குங்குமம் டாக்டர் இதழை பீடிஎஃப்பாக படித்தேன்.
ஹோமியோபதி பற்றிய கட்டுரையைப் படித்தேன். நின்றுபோன டாக்டர் இதழ் மீண்டும் தொடங்கப்பட்டு வருவது சந்தோஷமான விஷயம். அறையில் வெப்பம் கூடிவருவதால், மொட்டைமாடியில் சற்றுநேரம் இருந்துவிட்டு வந்தால்தான் தூங்கவே முடிகிறது.

நாங்கள் ஜூன் மாத நாளிதழுக்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம். பாடத்திட்டம் சார்ந்து எழுதும் ஆட்களைக் கண்டுபிடித்து வேலை சொல்லி எழுதி வாங்குவது கடினமாக உள்ளது. என்னுடைய மடிக்கணினி சீராக இயங்குவதில்லை. லினக்ஸ் இயக்குமுறை என்பதால் அதில் நேரும் பிரச்னைகளை விளக்கிக் கூறவும் முடியவில்லை.

எழுத்து வேலைகள் தேங்கிவிட்டன. இனி இந்த வேலைகளை க்ளவுட் முறையில்தான் செய்து சேமித்துக்கொள்ள வேண்டும். அண்மையில் எனக்கு பள்ளிக்கால நண்பர் ஒருவர் போன் செய்து பேசினார். அவருக்கு இரண்டாவதாகவும் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது. ஆதங்கமும், கோபமுமாக பேசினார். எனக்கு அவருக்கு எந்த முறையில் ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை. அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். நண்பரின் சாதியில் ஆண்பிள்ளைக்குத்தான் மவுசு போல.

மாதம் 70 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பவருக்கு மனதில் இப்படியொரு ஆதங்கம். அதிருப்தி வாழ்க்கையில் எப்படியும் வரும் போல….

அன்பரசு

2.5.2022

மயிலாப்பூர்



-----------------------------

 

 

Free photos of Campari soda

 

பன்னீர் சோடா பாக்கியம்!

அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு வணக்கம்.

நலமா? இன்று முழுக்க அறையில்தான் இருந்தேன். காலையில், கணினியில் சில எழுத்து வேலைகள் செய்யவேண்டியிருந்தது. மாலையில் நாளிதழுக்கு எழுதும் ஃப்ரீலான்சருடன் பேச வேண்டிய பணி இருந்தது. திருவான்மியூருக்கு பேருந்தில் பயணித்தேன். அங்கு சென்று மருந்தீஸ்வரர் திருமண மண்டபம் அருகே காத்திருந்து கே சிவராமன் என்பவரை சந்தித்துப் பேசினேன்.

இவரது எழுத்து்ப்பணி என்பது ஹாபி தான். முதன்மையாக கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கிறார். பிஎஸ்சி வேதியியலில் தங்கப்பதக்கம் வென்றவராம். திருவான்மியூரில் உள்ள பீச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பிறகு என் செலவில் அவருக்கு பன்னீர் சோடா வாங்கிக்கொடுத்துவிட்டு நான் ஏ1 பஸ் ஏறி மயிலாப்பூர் குளத்திற்கு வந்தேன். அடுத்தமுறை சந்திக்க வேளச்சேரி வந்துவிடுங்கள் என்று சொன்னார். அவரது மாமனார் வீட்டுக்கு வந்ததால்தான் அவருக்கு நான் பன்னீர் சோடா வாங்கித்தரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

இரவில் தயிர் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனவே தயிரை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொண்டு அறைக்கு சென்றேன். எம்எக்ஸ் பிளேயர் ஆப்பில் ஹெகிமோக்ளு என்ற துருக்கி வெப் தொடரைப் பார்த்து வருகிறேன். மருத்துவம் சார்ந்த தொடர். இதில் ஹெகிமோக்ளு என்ற மருத்துவர் பாத்திரம்தான் தொடரின் முக்கியமான அம்சம். பிறரை தீவிரமாக எரிச்சலூட்டி சந்தோஷப்படும் பாத்திரம்.

ராதே ஷ்யாம் - தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதாவது இந்த காலட்டத்தில் வந்த படங்களை விட நிதானமாக நகரும் காதல் படம். படத்தில் பெரிய முரண் கிடையாது. எனவே எதிர்பார்த்து பார்க்கும் காட்சிகள் என ஏதும் இல்லை.

அன்பரசு

5.5.2022

மயிலாப்பூர்






கருத்துகள்