ஹாரி அரச குடும்பத்தை விட்டு விலகியதைப்பற்றி டயானா கவலைப்பட்டிருப்பார்! - டினா ப்ரௌன், பத்திரிகையாளர்
டினா ப்ரௌன்
ஆங்கில அமெரிக்க பத்திரிகையாளர்
டினா, டாட்லர், வேனிடி ஃபேர், தி நியூயார்க்கர், நியூஸ்வீக், தி டெய்லி பீஸ்ட் ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவங்களைக் கொண்டவர். இவருக்கு வயது 68 ஆகிறது. இவரது கணவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான சர் ஹெரால்ட் ஈவன்ஸ். 2007ஆம் ஆண்டு தி டயானா க்ரானிக்கல்ஸ் என்ற நூலை எழுதினார். தற்போது அதன் தொடர்ச்சியாக தி பேலஸ் பேப்பர் என்ற நூலை எழுதியுள்ளார். அரசு குடும்பத்தைச் சேர்ந்த டயானா இறந்து இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் நிறைவுகிறது. அவரிடம் பேசினோம்.
இப்போது டயானா உயிரோடு இருந்தால் அவர் எந்த மாதிரி செயல்பட்டிருப்பார்?
அவர் அரசகுடும்பத்தில் இணைந்துதான் இருப்பார் என நினைக்கிறேன். ஹாரி, மேகன் போல பிரிந்திருக்க மாட்டார். அரச குடும்பத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருப்பார். பிரிந்துசெல்லாமல் ஒன்றாக இருக்க முயல்வார். தனது அடையாளத்தை கைவிட்டு கென்சிங்கன் மாளிகையை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். டயானாவுக்கு அவரது மருமகள் கேட்டிற்கும் நல்ல உறவு இருந்திருக்கும் என பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் இதில் நான் முரண்படுகிறேன். அவர் பிறரோடு போட்டிபோடுபவர். இருவருக்குமான உறவு மிகவும் இணக்கமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் தனது மகன் ஹாரியை நினைத்து வருத்தப்பட்டிருப்பார். மனிதநேய உதவிகளை இன்னும் பெரிய அளவுக்கு செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். இப்போதுள்ள கேட்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்பை அவர் உருவாக்கி செயல்பட்டிருப்பார்.
2012 ஆம் ஆண்டு அகதிகள் பிரச்னை ஏற்பட்டபோது நான் டயானாவை நினைத்தேன். அவர் நிச்சயம் அகதிகள் முகாமில் இருந்திருப்பார். இப்படி பல்வேறு மனிதநேய உதவிகளுக்கு அவர் புகழ்பெற்றவர்.
டயானா காலத்தை ஒப்பிடும்போது இப்போது அரச குடும்பம் நிறைய மாறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
ஆமாம். இப்போது அரச குடும்பத்தை புரிந்துகொள்ளும் விதமாக நிலைமை மாறியிருக்கிறது. அவர்கள் தங்கள் குடு்ம்பத்திற்குள் ஒருவருக்கொருவர் போட்டி போடுபவர்களாக இருக்கிறார்கள்.
முன்பிருந்ததைவிட அரசி நிறைய விதங்களில் மாறியிருக்கிறார். பலரும் மரியாதை அளிக்கும் விதமாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறாரா?
பாப் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் இதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். தி குயின், க்ரௌன் ஆகிய வெப் தொடர்கள் நிறைய விஷயங்களை மக்களுக்கு கூறியிருக்கிறது. 2012இல் நடைபெற்ற பிரிட்டிஷ் ஒலிம்பிக்கில் ஜேம்ஸ் பாண்டுடன் பங்கேற்றது, காமிக்ஸ் பாத்திரத்துடன் தோன்றியது ஆகியவற்றை முக்கியமான மாற்றங்களாக சொல்லலாம். உங்களுக்கு வயதாகும்போது சிலவற்றை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் கிடைக்கிறது என வைத்துக்கொள்ளலாம்.
இன்றும் அரச குடும்பம் காலத்திற்கு பொருத்தமானதாக உள்ளனரா?
அவர்கள் குடும்பத்திற்கு வயது 1000 ஆண்டுகளாகிறது. நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க அரசு குடும்பமே உதவுகிறது. ஜூப்ளி விழாவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் நீங்கள் உண்மையை உணரலாம். அவர்கள் நாட்டின் ஒற்றுமை அடையாளத்தை காண நினைக்கிறார்கள். அப்படித்தான் அரச குடும்பம் உள்ளது.
ஹாரியின் மனைவி மேகன், அரச குடும்பத்தின் மீது இனவெறி குற்றச்சாட்டை முன்வைத்தார் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதுபற்றி நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். முழுக்க வெள்ளையர்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றிருப்பது சற்று கடினம்தான். அங்குள்ள பணியாட்களும் வெள்ளையர்கள். பன்மைத்தன்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. எட்டு சதவீதம் பணியாளர்கள் கருப்பினத்தவராக இருக்கலாம். இதற்கு முன்பிருந்த அரசு குடும்பத்தினர் தீவிரமான இனவெறி கொண்டவர்கள்தான். கேட், வில்லியம் வட்டாரத்திலும் கருப்பினத்தவர்களே் இருப்பது கடினம். இனவெறி சார்ந்த நடவடிக்கைகளை நான் உறுதியாக இல்லை என மறுக்க முடியாது. நான் அதை பார்த்தது இல்லை என்று கூறுவேன்.
தி இந்து ஆங்கிலம்
கருத்துகள்
கருத்துரையிடுக