பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்! - வாங்கும் பழக்கத்தை ட்யூன் பண்ணுங்க!

 










உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை எதிர்கொள்ள என்ன செய்வது என நாம் நிர்மலா சீதாராமனிடம் அட்வைஸ் கேட்க முடியாது. அட்வைஸ் கேட்கிறாயே அதற்கென தனி ஜிஎஸ்டி போட்டுவிடுகிறேன் என்று கூட உத்தரவிடலாம். 

திட்டமிடுங்கள் 

ஆன்லைனோ, இன் ஸ்டோரோ எதுவாக இருந்தாலும் ஆஃபர் உள்ள பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம், புரமோட்டர்கள் உங்களை கடைகளுக்கு சென்று துரத்தி பொருட்களை வாங்க வைக்க முயல்வார்கள். அவர்கள் பொருட்களை திருடும் காக்கைகளைப் போல கை தூக்கி விரட்டி விட்டு எதற்கு கடைக்கு வந்தீர்களோ அந்த வேலையைப் பாருங்கள். அதுதான் வாழ்க்கை வளம் சேர்க்கும். 

சூப்பர் மார்க்கெட்டோ, ஹைப்பர் மார்க்கெட்டோ எதுவாக இருந்தாலும் வாங்க வேண்டிய பொருட்களை நீங்கள் பட்டியல் போட்டபின்னரே கடைக்கு போகவேண்டும். அப்படி போகாதபோது பர்சிலுள்ள பணம் வெட்டியாக செலவாகும் 

பிராண்டிற்கு மாற்று 

இதுவரை பிராண்டுகளை வாங்க நிறைய செலவு செய்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது. எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள கம்பெனியின் சுயமான மாற்று பொருட்களை வாங்கி பயன்படுத்த முயலுங்கள். இந்த பொருட்களுக்கு நிறைய ஆஃபர்கள் உண்டு. இதனால் விலை குறையும். காசு மிச்சமாகும். ஜியோவின் ஸ்மார்ட் பாயிண்டில் பருப்பு, அரிசி என அனைத்திலும் ரிலையன்சின் பிராண்டு பொருட்கள் இருக்கும். அத்தனை பொருட்களிலும் ரிலையன்சை நம்பி சாப்பிட முடியாது. எது தேவையோ அதில் மட்டும் அதை பயன்படுத்தலாமா என முயற்சி செய்யலாம். காமதேனு கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் அம்ரித் சர்க்கரை 48 எனில், அதே சர்க்கரை ஸ்மார்ட் பாயிண்டில் 38க்கு கிடைத்தால் காசு மிச்சம்தானே? 

டிஸ்கவுண்ட் விலைக்கா, தரத்திற்காக?

சரவணா ஸ்டோர் போல விலையை 355 ரூபாய் வைத்துவிட்டு அதற்குமேல் ஸ்டிக்கர் ஒட்டி அதில் விலையை நூறு ரூபாய்க்கு ஏற்றி பிறகு இயல்பான விலைக்கு வருவது போல ரோலர்கோஸ்டர் தள்ளுபடி அறிவித்து பித்தலாட்டம் செய்வார்கள். கபர்தார்.... ஒன்று வாங்கினால்... என தொடங்குவதே பொருட்களை தள்ளிவிடும் பிளான்தான். எனவே அதை விட விலை குறைந்த பொருள் ஷெல்பில் இருப்பதை பெரும்பாலும் கூற மாட்டார்கள். எனவே பழங்களைத் தவிர்த்து மீதியுள்ள பொருட்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறதா ஆராய்ந்து பொருட்களை வாங்கலாம். 

ஃபிரிட்ஜைப் பயன்படுத்தி உணவைக் காப்பாற்றுங்கள்

வாங்கும் அத்தனை பொருட்களையும் நம்மால் பயன்படுத்த முடியாது. அப்படியெனில் கூடை கூடையாக குஜராத் வணிகர்களின் கடையில் பொருட்களை வாங்குவதை குறைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உணவு அதிகம் சேதமாவதைத் தடுக்கலாம். இறைச்சிக் கடையில் கூட ஆண்டுக்கணக்கில் கறியை ஐஸ்பெட்டியில் வைத்து சவம் போல பாதுகாத்து தான் பிரியாணி தயாரித்து விற்கிறார்கள்.நாம் அந்தளவு ஈவு இரக்கமற்ற வியாபாரத்திற்கு போக வேண்டாம். சீஸ், கேக், இரவு மிஞ்சிய உணவு, பழங்களை பாதுகாத்து சில நாட்கள் அதன் ஆயுளை நீட்டிக்கலாம். 

ரீடர்ஸ் டைஜெஸ்ட் 

 











கருத்துகள்