இடுகைகள்

கிரண் அப்பாவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர் சொல்வதை பெண்கள் கேட்டு நடந்தாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்! -

படம்
  மீக்கு பாகர தெக்கிரவாகினி கதை, நடிப்பு – கிரண் அப்பாவரம் இசை மணி சர்மா காதல் திருமணம் செய்தால் குடும்ப உறவுகள் வருத்தப்படுவார்கள். எனவே வீட்டில் பார்த்து வைத்த திருமணம் செய்யுங்கள். சந்தோஷமாக இருக்கலாம் என கலாசார செய்தி சொல்லுகிறது படம். ஹைதராபாத்தில் டாக்சி டிரைவராக இருக்கிறார் நாயகன். அவர் காரில் குடிபோதையில் உள்ள பெண் வாடிக்கையாளர் ஏறுகிறார். அவரிடம் பேசி அவரது மனதில் உள்ள பிரச்னையைக் கேட்கிறார். அதில்தான் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காதலும் காதலன் ஏமாற்றிவிட்டு சென்றதும் தெரியவருகிறது. இதனால் அவள் காதலனுக்காக வீட்டைவிட்டு வந்து, நகரத்தில் வேலை செய்கிறாள். பெற்றோரிடம் செல்லவும் பயம். ஏனெனில் அவளின் கல்யாண முகூர்த்தம் போதுதான் காதலனோடு ஓடி வருகிறாள். இதனால் அவளது அப்பா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இன்னும் நிறைய சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதெல்லாம் கேட்கும் நாயகி, பிறகு டாக்சி டிரைவரிடம் அவனது காதல் கதையைக் கேட்கிறாள். அவனும் தான் வழக்குரைஞர் பெண்ணை சித்தப்பா உதவியுடன் காதலித்தது பற்றி சொல்லுகிறார். இருவரும் மெல்ல நட்பாகிறார்கள். அப்போது டாக்சி டிரைவர் அந