முதியவர்களை கொலைகாரர்கள் குறி வைத்து கொல்வது ஏன்?

 

 

 

 

.GERONTOPHILIA. -UNCOLORED/UNFINISHED- by Anton-Constantin ...

 

 

 

 

ஜெரோன்டோபிலியா


வயது முதிர்ந்தவர்களை தாக்கி கொல்வது, சித்திரவதை செய்வது ஆகியவை இந்த பிரிவில் அடங்கும். எதற்கு பெரியவர்கள்? அவர்களாலும் கொலைகாரர்களின் வேகத்தை எதிர்கொள்ள முடியாது. எளிதாக கொலை செய்து சந்தோஷப்படலாம் அல்லவா?


ஜான் வேய்ன் குளோவர்


அனைத்து கொலைகார ர்களின் பட்டியலிலும் ஜானை தேடினால் கடைசியாகத்தான் தென்படுவார். அந்தளவு தன்னை சைக்கோ கொலைகாரன் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்த மனிதர். ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தில் ஐம்பதுகளில் இருந்தவர். விற்பனையாளராக வேலை செய்தவருக்கு வீடு இருந்தது. மனைவி இரு மகள்கள் இருந்தனர். கிடைத்த ஓய்வு நேரத்தில் கூட வயது முதிர்ந்தவர்களின் சங்கத்தில் வேலை செய்து வந்தார்.


இங்கிலாந்தை பூர்விகமாக கொண்ட ஜான், ஆஸ்திரேலியாவிற்கு தனது இருபத்து நான்கு வயதில் வந்தார். அப்போதே பெண்களை தாக்கிய வழக்கு அவர்மீது இருந்தது. மூன்று ஆண்டுகள் சிறையில் இருக்கும்படி தண்டனை உத்தரவிடப்பட்டாலும் கூட அதிலிருந்து தப்பி, மீண்டுமொரு குற்றவழக்கில் சிக்கினார். அதற்குப்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தவர், நல்ல பிள்ளையாக நடந்துகொண்டார். திருமணம் செய்துகொண்டார். கிடைத்த வேலையை செய்துகொண்டு வீக் எண்டில் பீர் குடித்து வந்தார். ஆனால் சைக்கோ கொலைகாரர்களைப்போலவே வாய்ப்புக்காக காத்திருந்தார் என்று தெளிவாக சொல்லலாம்.


1989இல் தனது பாட்டி வேட்டையைத் தொடங்கினார். எண்பதுகளில் உள்ள கைத்தடி இல்லாமல் நடக்க முடியாத , புற்றுநோய் தாக்கிய, கண்பார்வை, அல்லது காது கேட்காத பலவீனமான பாட்டிகளை தாக்கி அவர்களின் உள்ளாடையால் கழுத்தை இறுக்கி கொல்வது ஜானின் ஸ்டைல். மண்டையில் கோடாரியை ஆழமாக ஊன்றிவிட்டு சென்றுவிடுவார். இந்த அடையாளங்களை பார்த்து குற்றவாளிக்கு வல்லுறவில் ஆர்வமில்லை. ஆனால் உள்ளாடையை கழுத்தில் இறுக்கி கொன்றதில் அவரது பாலியல் ஆர்வம் தெரிகிறது என குறித்திக்கொண்டது. இப்படியே ஆறுபேரை கொன்றார். உணவுப்பொருட்களை விற்கும் விற்பனையாளர் என்பதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று வயதானவர்களை தேர்ந்தெடுத்து கொல்வார். ஒருமுறை அப்படி சென்றபோது முயற்சி தோல்வியில் முடிய, விரக்தியில் தற்கொலை செய்தியாக இனி எப்போதும் பாட்டிகளை கொல்லமாட்டேன் என்று எழுதி வைத்தார். தற்கொலை முயற்சி தோல்வியடைய காவல்துறை ஜானை பிடித்து சிறையில் அடைத்து ஆயுளுக்கும் ரொட்டி தின்ன வைத்தது.




எதற்காக கொல்கிறார்கள்?



இதற்கு எளிமையான காரணம் என்று எதனையும் கூறிவிட முடியாது. ஜெப்ரி டாமர், டெட் பண்டி ஆகியோரை பின்தொடர்ந்தால் அவர்கள் கொலை செய்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். சிறுவயதில் பாலியல் சீண்டல்கள், வன்முறை, ஹார்மோன் பிரச்னைகள் என சில காரணங்களைக் கூறலாம். ஒருவகையில் இப்பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துகளைக் கூட தடுத்துவிடும் மனதைரியம் யாருக்கும் வரும். தாங்கள் செல்லும் வழியை விட்டு ஏன் தடுமாறி வேறுவழியில் செல்கிறார்கள் என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என உளவியலாளர் சிக்மண்ட் பிராய்டு கூட தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கிறார்.


ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அவரின் மனதிற்குள் என்ன மாதிரியான போராட்டம் நடக்கிறது என்பது பின்னாளில் செயல்களாக வெளிப்படும்போதுதான் தெரிகிறது. சிலர் இதனை ஓரளவு அடையாளம் கண்டாலும் அதனை அனைவருக்குமானதாக வடிவமைப்பதில் தோற்றுப்போயுள்ளனர்.


அடாவிசம்


இதனை தொன்மைக்கால சடங்கு என்று வரையறுக்கலாம். ஜெப்ரி டாமர், டெட் பண்டி, எடி கெய்ன் ஆகியோருக்கு இந்தவகையில் தொடர்புண்டு. இவர்கள் தாங்கள் கொன்றவரகளை வைத்து சடங்குகளை செய்வது, அவர்களின் எலும்புகளை உடல் போல அடுக்கி வைத்து சக்தி கிடைக்கிறது என தாங்களே உருவாக்கிய கோட்பாடுகளை சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிறுவயதில் தொடர் கொலைகார ர்களுக்கும் அறம், மனிதநேயம், அன்பு, கருணை என ஏராளமான விஷயங்களை சொல்லித்தந்தாலும் பின்னாளில் அவர்களால் அதனைக் கடைபிடிக்க முடிவதில்லை. இதற்கு சமூகத்தில் பொருந்திப்போக முடியாத தன்மைதான் காரணம் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பான கோட்பாடுகளை உளவியலாளர் சீசர் லாம்போரோசா உருவாக்கினார். 1876ஆம் ஆண்டு கிரிமினல் மேன் என்று நூலை எழுதி வெளியிட்டார். டார்வினின் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு சில விஷயங்களை நூலில் விளக்கியிருந்தார். கொலைக்குற்றவாளிகள் பிறப்பிலேயே அப்படித்தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு சிறிய மண்டையோடு, அகன்ற நெற்றி அட்ங்காத நீண்ட காதுகள், நீளமான கைகள் என கொலைகாரர்களின் சாமுத்திரிகா லட்சணங்களை வடிவமைத்து அதற்கான காரணங்களைக் கூறியிருந்தார். கூடவே பழங்குடி மக்களைப் போலவே பச்சை குத்தியவர்கள் என வினோதமான காரணங்களை அடுக்கினார்.


இன்று சீசரின் கொள்கைகள், கோட்பாடுகள் காணாமல் போய்விட்டன. ஒருகாலத்தில் இவை பரபரப்பாக பேசப்பட்டது மட்டும் உண்மை. இதுபோன்ற விஷயங்களை ஆழமாக அறிய மேன் இன்டூ வோல்ஃப் என்ற ராபர்ட் எய்ஸ்லர் எழுதிய நூலைப் படிக்கலாம்.


மூளை சிதைவு


விபத்தில் அடிபட்டு மூளையில் ஏற்பட பாதிப்பு காரணமாக கொலை செய்யத் தொடங்கினார்கள் என்று சிலர் கூறிவருகின்றனர். தொடர் கொலைகாரர்கள் சிலருக்கு இளம் வயதில் தலையில் அடிபட்டிருப்பது பொதுவான ஒற்றுமையாக அறியப்பட்டுள்ளது. அதேசமயம் தொடர் கொலைகார ர்களின் மூளையில் வினோதமான தன்மை ஏதாவது காணப்படுகிறதா என்று தேடியதில் பெரியளவு பயன் ஏதும் கிடைக்கவில்லை. உதாரணமாக ஜெர்மனியைச் சேர்ந்த கொலைகாரர் பிரிட்ஸ் ஹார்மனைக் கூறலாம். இவரது மூளையை வெட்டி எ்டுத்து கோட்டிங்ஜென் பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்தனர். ஆனாலும் இம்முயற்சிக்கு எதிர்பார்த்த பயனில்லை.


1920ல் இரண்டு டஜன் பேரைப் போட்டுத்தள்ளிய கொரில்லா கொலைகார ர் லியோனார்டு நீல்சன், சான்பிரான்சிஸ்கோ நகரில் பைக்கில் சென்று கார் மீது மோதினார். இந்த விபத்தில் சுயநினைவின்றி ஒருவாரம் மருத்துவமனையில் கிடந்தார். இதைவைத்து இவரது வழக்குரைஞர்கள் கொலைவழக்கிலிருந்து விடுவிக்க முயன்று தோற்றுப்போனார்.


இதேபோல விலைமாதுக்களை குறிபார்த்து போட்டுத்தள்ளிவிட்டு அவர்கள் உடல் உறுப்புகளை தின்றவர் ஆர்தர் சாகிராஸ். இவர் நான்கு முறை விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு பிழைத்தவர். இவருக்கு மூளையில் டெம்பரல் லோப்பில் கூட பாதிப்பு இருந்தது என்று மருத்துவர்கள் கூறினர். அடுத்து பாபி லாங். இவர் கார் மீது மோதிய வேகத்தில் அணிந்திருந்த ஹெல்மெட் கூட நொறுங்கிப்போனது. ஆனாலும் உயிர்பிழைத்தார். பிறர் உயிரைப் பறிக்கவே பின்னாளைய வாழ்க்கை உதவியது. ஹெய்ட்னிக் என்பவர் மரத்தில் தலை அடிபட்டு கபாலத்தின் வடிவமே மாறியது. இதனால் இவரை புட்பால் ஹெட் என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். தனது மகளையே கொன்று போட்ட பிரெட் வெஸ்ட் என்ற கொலைகார ருக்கு விபத்தில் அடிபட்டு மண்டையோடு நொறுங்கிப்போனது. இதனால் தலையில் இரும்புத்தகடு ஒன்றை வைத்திருந்தனர்.


ஆராய்ச்சியாளர் சிலர் விபத்தில் தலையில் அடிபட்டதால்தான் இவர்கள் குற்றவாளிகள் ஆனார்கள் என்று வாதிக்கின்றனர். ஆனால் உண்மையில் உலகம் முழுக்க ஏராளமானோர் விபத்தில் அடிபடுகின்றனர். சிலர் பிழைக்கின்றனர். பலர் சம்பவ இடத்திலேயே மோட்சம் அடைகின்றனர். பிழைப்பவர்கள் பலரும் மேற்சொன்னது போல கொலைகார ர்கள் ஆவதில்லையே என்று வாதிடும்போது ஆராய்ச்சியாளர்கள் எந்த பதிலும் கூறுவதில்லை. கொலைகார ர்கள் ஆவதற்கு அவர்களின் தொந்தரவு தரும் குடும்பமும், சுற்றமும், பள்ளியும்தான் பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளன. இந்த விஷயத்திலும் கூட விதிவிலக்காக போதைப்பொருட்கள், குடிநோய், சூதாட்டம் காரணமாக கொலைகாரர்களாக மாறியிருக்கலாம். வெளிப்புற காரணங்களை விட உள்புறமாக மனதில் நடக்கும் பல்வேறு போராட்டங்களே அமைதியான மனிதனை உசுப்பி அசுரனாக்குகிறது. இப்போது கொலைகாரர்களின் குடும்ப பின்னணியைப் பார்ப்போம்.


பாபி லாங்கின் அம்மா, அவரை தன்னுடன் ஒரே படுக்கையில் படுத்து தூங்க கட்டாயப்படுத்தும் பழக்கம் கொண்டவர். அம்மா, தனது ஆண் தோழர்களுடன் உடலுறவு கொள்ளும்போதும் கூட பாபி அங்கே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். நீல்சனைப் பொறுத்தவரை அவரது பெற்றோர் இறந்த துஅவருக்கு தாங்க முடியாத இழப்பு. பாட்டி நீல்சனை எடுத்து பராமரித்து வளர்த்தாலும் அவரால் இழப்பு தந்த வலியிலிருந்து மீள முடியவில்லை. ஆர்தர் சாகிராஸ் சிறுவனாக இருந்தபோதிலிருந்து பக்கத்து வீட்டுக்கார ர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார். பத்து வயதில் விளக்குமாறின் கைப்பிடியால் மலப்புழையில் செய்யப்பட்ட பாலியல் உறவு அவரது மனதை பெரிதும் பாதித்தது. ஹெய்ட்னிக்கின் அப்பா, கனவு கண்டு படுக்கையை சிறுநீரால் நனைத்த மகனை அனைவரின் முன்னிலையில் அவமானப்படுத்திக்கொண்டே இருந்தார்.


மூளையில் ஏற்படும் பாதிப்பு என்பது தூக்கமின்மை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத இயலாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. நேரடியாக கொலை செய்வதற்கான தூண்டுதலை தருமா என்பது வெளிப்படையாக தெரியவில்லை. மருத்துவர் பின்கஸ் சிறையில் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகள் நால்வரை விசாரித்து தகவல்களைப் பெற்றபோது, அவர்கள் நால்வருமே பெற்றோரால் தலையில் இறக்கும்வரை அடி வாங்கியுள்ளன்ர். சிலரது தலையில் கண்ணாடி பாட்டில்களை அடித்து உடைத்துள்ளனர். இதுபற்றி மேலும் தகவல்களை அறிய்ய பேசிக் இன்ஸ்டின்க்ட் வாட் மேக்ஸ் கில்லர்ஸ் கில் என்ற நூலை இணையதளத்தில் வா்ங்கிப் படிக்கலாம். இதனை ஹெச். பின்கஸ் என்ற எழுத்தாளர் எழுதியுள்ளார்.


வின்சென்ட் காபோ







கருத்துகள்