காதல் மீட்டர் - சமூக தகுதிகள் திருமணத்தை தீர்மானிப்பதில் தோற்றுப்போவது ஏன்?

 


காதல் மீட்டர்

3


ஒருவரை மணம் செய்து வைக்க இந்துமதம் சார்ந்து நிறைய தகுதிகள் பார்க்கிறார்கள், பிற மதங்களிலும் இதுபோன்ற தகுதிகள் பொருந்தும்.  அவையெல்லாம் பொதுவானவைதான். அடிப்படையாக மனப்பொருத்தம் தவிர அனைத்தையும் பார்க்கிறார்கள். உடல் தோற்றம், சமூக அந்தஸ்து, புத்திசாலித்தனம், பொருளாதார தகுதி. இதுதான் சமூக தகுதிகள். இந்த நான்கு விஷயங்களை சமூகம் கவனிக்கிறது. இதன் அடிப்படையில்தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன. 


பெரும்பாலான திருமணங்கள், விவாகரத்தில் வந்து நிற்கும்போதுதான் பொதுவான சமூக தகுதிகள் வேலைக்கு ஆகவில்லை என பெற்றோருக்கு உறைக்கும். சில சமயங்களில் திருமணங்கள் காசு பறிக்கும் செயலாக மாற, மணமகனோ, மணமகளோ தற்கொலை செய்துகொள்வது அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவது கூட நடைபெறுகிறது. அரசியல் வணிக திருமணங்களில் புகார்கள் எழுவதில்லை. அவர்களே சமாதானம் பேசிக்கொண்டுவிடுகிறார்கள். யார் தரப்பு அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக இருக்கிறதோ, அவர்கள் நடைபெற்ற தவறுக்கு காரணகர்த்தா. 

இன்று எழுச்சி பெற்றுள்ள பார்ப்பன பாசிச மதவாத அமைப்புகள், அதிகாரத்தை குறிவைப்பதில்லை. மக்களின் மனங்களை புனித நூல்களை வைத்து கவர்ந்து குறிப்பிட்ட கருத்தை, நம்பிக்கையை முளைத்தெழ செய்கிறார்கள். அதன் வழியாக எளிதாக அனைத்து கட்டமைப்புகளிலும் ஊடுருவி சமூகத்தை கையகப்படுத்திக்கொள்ளலாம். இந்த வகையில்தான் அகமணமுறை உருவானது. 


திருமணப் பொருத்தம் பார்ப்பதில் வேடிக்கை வேண்டுமென நினைத்துதான் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவதையெல்லாம் கேட்டார்களோ என்று தெரியவில்லை. ஒரு நீண்டகால உறவுக்கு உடல் அழகு, தோற்றம் என்பது முக்கியமல்ல. மன ஒற்றுமைதானே தேவை. லட்சியங்கள் கூட ஒரே மாதிரியான பாதையில் இருக்கலாம். 


காதலிக்கும்போது கட்டழகு கைகள் நூலின் அட்டையில் உள்ளது போன்ற உடலைக் கொண்டவர், பின்னாளில் தொப்பை விழுந்து வயதானவர் போல ஆகலாம். அப்போது அழகை நினைத்து திருமணம் செய்த பெண்ணின் நிலை என்னவாகும்? பொருளாதாரம் சார்ந்த நிலையும் கூட அப்படித்தான். அது கையைவிட்டுப் போகலாம். சாதி, பணம், புகழ்பெற்ற குடும்பம் என்ற சமூக நியதி அடிப்படையில் திருமணம் செய்வது நல்லதல்ல. மேற்சொன்ன தகுதிகள் எல்லாம் ஒரு நொடியில் மாறிப்போகலாம். அப்போது செய்துகொண்ட திருமணம் என்னாகும்? சிலர் தன்னை நிராகரித்தவர்களை பழிவாங்க வேகமாக திருமணம் செய்துகொள்கிறார்கள். காதல் என்ற உறவில் அதிவேக முடிவு நல்ல முடிவைத் தராது. 


பொருளாதார அடிப்படையைப் பார்ப்போம். இங்கு உலக வாழ்க்கையில் யாரும் யாரையும் தாங்கி பிடிக்க மாட்டார்கள். உங்கள் திறமையால் வேலையைப் பிடித்துக்கொண்டால் சுயமரியாதையோடு வாழலாம். மற்றபடி அப்படி இல்லாதபோது இன்னொருவரை நம்பி வாழவேண்டியிருக்கும். காசுக்கு யாரும் பிறரை நம்புவது நல்லதல்ல. வாக்குறுதிகள் பணம் விவகாரத்தில் நம்ப முடியாது. நீ வேலைக்குப் போ என மனைவியை கட்டாயப்படுத்துவது எல்லாம் சாத்தியம் இல்லை. அதாவது வீட்டுவேலையை செய்துகொண்டு பெண், வேலைக்கும் போகவேண்டுமென பேராசைப் படுகிற ஆட்கள் ஊரில் இருக்கிறார்கள். 


எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு சொந்த வீடுண்டு. கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அவரது சுயதொழில் வருமானம் வரையறைக்கு உட்பட்டது. சரிதான். அதற்கான விருப்பமே இல்லாத அவரது மனைவியை வேலைக்கு போ என தள்ளிக் கொண்டிருக்கிறார். ஆர்வம் இல்லாதவர்களை எதற்கு வேலைக்குத் தள்ள வேண்டும்? திருமண வாழ்க்கை என்றில்லை உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையில் தியாகம் என்பதையெல்லாம் எதிலும் செய்யக்கூடாது. உங்கள் வாழ்க்கை நாசமாக போகிறது என்றால் அது விட்டுக்கொடுப்பது, பிறருக்காக செய்தேன் என்பதுதான். இதற்கெல்லாம் எக்காலத்திலும் எந்த மதிப்புமில்லை. யாரும் நினைத்தும் பார்க்கப்போவதில்லை. வேலைக்கு போகிற பெண்கள் என வரன் பார்ப்பதில் குறிப்பிடுவார்கள். எதற்காக இப்படியான நிபந்தனை என்றால் சமூக விதிகள் அடிப்படையில் பொருளாதாரம் முன்னே வரும். அன்பு என்ற பெயரில் நடைபெறும் சுரண்டல்தான் வேலைக்குப் போவதும என்று கூறுவது கூட... ஒருவர் தானாகவே வேலைக்கு போகிறேன் என்றால் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கிற துணைவர்கள் எத்தனை பேர் இங்குண்டு? இந்திரா நூயி ஆனாலும் கணவருக்கு என்ன சமையல் செய்து கொடுப்பீர்கள் என வட இந்திய பத்திரிகையாளர் கேட்பார். இது ஒரு நோய் பிடித்த மனநிலை.


பணம் சம்பாதிக்க தெரிந்தவர்கள் அனைவருக்கும் அதை முறையாக செலவு செய்யத்தெரியாது. அடிப்படை நாகரிகமோ, பண்போ இல்லாதவர்களாக இருப்பார்கள். பரம முட்டாளாக இருப்பார்கள். ஒருவர் வெளியில் எப்படி என்பதல்ல, உள்ளுக்குள் எப்படி என அறிந்துகொள்வது முக்கியம். அதுதான் உறவை நீண்டகாலத்திற்கு ஆயுள் கொண்டதாக மாற்றும்.  ஒருவர் பிறக்கும்போது திறமை உள்ளவராக பிறக்கிறாரோ இல்லையோ ஆனால் குண இயல்பில் பெரிய பழுது இருக்காது. அதை நீண்டகால நோக்கில் மெல்ல பராமரித்து வளர்த்தால் போதும். பிறப்பு, பாரம்பரியம் என்று பேசுவதில் விஷம் உள்ளதே ஒழிய உண்மை இல்லை. 


காதலிக்க, மணம் செய்துகொள்ள இன்று பல இணையர்களை புதிய தலைமுறையினர் சட்டென மாற்றுகிறார்கள். அதில் யாருக்கும் எந்த தயக்கமுமில்லை. மனிதர்கள் பொருட்கள் போல மாறிவிட்டார்கள். சிலரை காதலிக்க என்றும் சிலரை மனைவிக்கான பொருள் என்றும் கூட இணையத்தில் கூறுகிறார்கள். அடிப்படையில் ஒருவரின் முழுமையாக குணங்களை அறிய அவரோடு சிறிதுகாலம் பழகினாலே போதும். உண்மையான நிறம் வெளியே தெரிந்துவிடும். ஒருவர் தன்னை அதிக காலம் மறைத்து வைத்துக்கொண்டிருக்க முடியாது. 


#love #marriage #life #gen z #birth #dowry #society #religion #myths #india



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!