ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி
உளவியல் கட்டுரைகள்
ஆங்கிலம்

இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும். 

நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது. 

நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்ட அணுகுமுறை என இருவகையான கற்பித்தல் முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் மாணவர்களை மையமாக கொண்ட முறையில் சாதகங்கள் அதிகம். சுயமான சிந்தனைகளை அதில் வளர்த்துக்கொள்ளலாம். 

உளவியலை எளிமையாக புரியும்படியாக கூறவேண்டுமென நூலாசிரியர் மெனக்கெட்டுள்ளார். அதன் விளைவாகவே முக்கியமான பல்வேறு கருத்துகளை கூறும் கட்டுரைகள் கூட எளிமையாக உள்ளன. அவற்றிலுள்ள கருத்துகளும் புரிந்துகொள்ளும்படி எழுதப்பட்டுள்ளன. அத்தனை விஷயங்களையும் எழுத்தாளர் இந்த முறையில் கூறிவிட முடியாது. ஆனால், உளவியலின் அடிப்படையை வாசிக்கும் வகையில் நூலை முக்கியமானது என கருதலாம். எல்லோருக்கும் புரியும்படி ஒரு நூலை எழுதுவது மிக கடினம். அப்படி எழுத முயன்றால் அது குழந்தைகளுக்கான நூலாக வந்துமுடியக்கூடும். 

ஆண், பெண் பாகுபாடு, பாலினம், பாலுறவு, சுதந்திரம், மேலாதிக்கம் பற்றிய உளவியல் கருத்துகளும் எழுதப்பட்டுள்ளன. இன்று கூட பெண்கள் அமரும் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்துகொண்டு இடைஞ்சல் தருகிறார்கள் மேலாதிக்கத்தை நிறுவ முயல்கிறார்கள். இதுபோன்ற செய்திகளை ஆழ்ந்து பார்க்க வேண்டும். 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!