இந்தியா கோவிட் -19க்கான மருந்துகளை எப்படி விநியோகம் செய்யவிருக்கிறது?
இந்தியாவில் இன்று தடுப்பூசி வழங்குவது முக்கியமான பணியாக மாறியுள்ளது. இந்த வகையில் நாட்டில் 1. 4 பில்லியன் அளவில் தடுப்பூசிகளை நாடு முழுக்க கொண்டு செல்லவேண்டிய தேவையுள்ளது.
இந்துஸ்தான் சிரிஞ்சஸ் அண்ட் மெடிக்கல் டிவைசஸ் என்று நிறுவனமே நாட்டில் பெரிய சிரிஞ்ச் தயாரிப்பாளர். 570 மில்லியன் என்ற தனது தயாரிப்பை அடுத ஆண்டில் ஒரு பில்லியனாக மாற்ற முடிவெடுத்துள்ளது. கண்ணாடி பாட்டில்களை தயாரிப்பது நிறுவனத்திற்கான சவாலாக இருக்கும்.
கோவிட் -19 மருந்துகளுக்கு அதிக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் இரண்டு.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஸைடஸ் கடிலா.
சீரம் நிறுவனம் 2,100 கோடி முதலீட்டில் ஐந்து மருந்துகளை சோதித்து வருகிறது. 500 கோடி முதலீட்டில் கடிலா இரண்டு மருந்துகளை சோதித்து வருகிறது.
பணக்கார நாடுகளில் 51 சத்வீத கோவிட் -19 மருந்துகள் விநியோகிக்கப்படவிருக்கின்றன. உலக மக்கள்தொகையில் இதன் பங்கு 13 சதவீதம்தான்.
உலகில் 3.6 பில்லியன் அளவுக்கு கோவிட் -19 மருந்துகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்தியாவில் தற்போது சீரம் மூலம் 400 மில்லியன், பாரத் பயோடெக் மூலம் 300 மில்லியன், ஸைடஸ் கடிலா மூலம் 100 மில்லியன் என மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளன.
2009ஆம் ஆண்டு ஃப்ளூ வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளை வளர்ந்த நாடுகள் தேக்கிக்கொண்டதால், ஆப்பிரிக்க நாடுகளுக்கு போதுமான மருந்துகள் கிடைக்கவில்லை.
உலக வர்த்தக கழகத்திடம் கோவிட் மருந்துகளை அரசுகள் உள்நாட்டிலேயே தயாரித்துக்ளகொள்வதற்கான அறிவுசார் உரிமையை தர வலியுறுத்தி இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் கேட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனமும் இதனை ஆதரிக்கிறது.
மருந்துகளை விமானநிலையத்தில் இறக்கி நாடு முழுக்க விநியோகிக்க வெப்பநிலையை நிலையாக வைக்கும்படியான பகுதிகள் தேவை.
இந்தியாவில் தடுப்பூசிகளை பாதுகாப்பதற்காக 28 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதனை கோவிட் தடுப்பூசிகளை பாதுகாக்க அரசு பயன்படுத்தும்.
போலியோ, டெட்டனஸ் போன்ற மருந்துகளை எப்படி மக்களிடம் பிரசாரம் செய்தார்களோ அதைப்போலவே கோவிட் -19 க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியுள்ளது.
நாடு முழுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை 26.7 மில்லியன் குழந்தைகளுக்கும், 29 மில்லியன் கர்ப்பிணிகளுக்கும் வழங்க வேண்டியுள்ளது. இதற்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், நர்ஸ்கள் தேவைப்படுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக