காலநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்வது எப்படி?

 









சூரிய வெப்பம் அதிகரித்து வரும் மாதம் இது. அதிகரிக்கும் வெப்பம் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பில்லை. அந்தளவு உலகம் முழுக்க மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. மாசுபாட்டைக் குறைப்பதாக பேசினாலும், அதன் பின்னணியில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்நிறுவனங்களை பாதுகாக்கும் முயற்சியே நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமல்ல, மேற்கு நாடுகளிலும் இதுதான் நிலைமை.

2021ஆம் ஆண்டு ஐ.நாவில் கார்பன் மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தில் 193 நாடுகளில்  24 நாடுகள் மட்டுமே தெளிவான மாசு கட்டுப்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பித்தன. இப்படி திட்டங்களை கூறிய நாடுகள் அதை சரியாக செயல்படுத்துமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், இதுபற்றிய எண்ணமே இல்லாமல் உள்ள நாடுகள்தான் கவலையை அதிகரிக்கின்றன.

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்ப அலை, மழைப்பொழிவு குறைதல் ஆகியவற்றை பிற நாடுகளை விட இந்தியா அதிகம் சந்திக்கப்போவதாக தட்பவெப்பநிலை ஆய்வாளர்கள் தகவல் கூறுகிறார்கள். அரசு, இதுதொடர்பாக செய்யும் விஷயங்களை விட தனியார் நிறுவனங்கள் பரவாயில்லை ரகத்தில் இயங்கி வருகிறார்கள்.

 ரீநியூ என்ற மறுசுழற்சி நிறுவனம்  இந்தியாவில் பத்து மாநிலங்களில் நூறு பள்ளிகளில் 20 ஆயிரம் மாணவர்கள் என்ற குறிக்கோளை முன்வைத்து கால நிலை மாற்றம் பற்றி கல்வியை கற்பித்து வருகிறது. இதில் வணிக நோக்கமும் இருக்கிறது என்றாலும் அதை அவர்கள் செய்கிறார்கள்.

பிவிஆர் என்ற பொழுதுபோக்கு நிறுவனம் கூட தங்களது அலுவலகங்களில் நீர், மின்சார சேமிப்பு பற்றிய அக்கறையைக் கொண்டிருக்கின்றனர்.

2070ஆம் ஆண்டு மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவோம் என வாய்ச்சவடால் விடுவதெல்லாம் கைத்தட்டல்களைப் பெற உதவுகிறது. இனி, பேச்சை கைவிட்டு செயல்பாட்டில் திறமையைக் காட்டுவதே முக்கியம். இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் செயல்பாட்டில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளை முன்னெடுத்தாலே பெரிய மாற்றம் நிகழும்.

குறிப்பிட்ட ஆண்டு இலக்கை முன்வைத்து மாசுபாட்டை குறைக்கலாம். மறுசுழற்சி சார்ந்த கொள்கைகளை உருவாக்கி, அதன் வழியாக அத்தொழிலுள்ள தொழில் அதிபர்களுக்கு உதவுவதால் இந்திய அரசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்திவிட முடியாது. 

அமெரிக்காவில் உள்ள பீனிக்ஸ், மியாமி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தலைநகரமான சியரா லியோன் ஆகிய இடங்களில் வெப்ப பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வெப்பத்தை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுகின்றனர். நான்கு பேர்களுக்கு இடையே பேசிப் பேசி தனது செயல்களை ஒருவன் அதிக நாட்கள் மறைத்து வைக்க முடியாது என தத்துவவியலாளர் ரூசோ கூறியுள்ளார். இந்தியாவின் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது.

 

 காலநிலை மாற்றத்தை சற்றேனும் சமாளிக்கும் சில வழிகளைப் பார்ப்போம்.

 தனியார் வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்வது அவசியம். மக்கள், அரசின் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது.

நகரங்களில் மேம்பாலங்களை இஷ்டத்திற்கு கட்டி வைப்பது ஆளும் அரசுக்கு கமிஷன் கிடைக்க உதவலாம். ஆனால், போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க உதவாது. இப்படி நிறைய பாலங்களை கட்டுவதால் மரங்கள் ஏகத்துக்கும் வெட்டப்படுகின்றன. இதற்கு பதிலாக வெப்பத் தீவுகளை உருவாக்கலாம்.

பெரு நகரங்களில் அதிகரித்துவரும் வெப்ப அலைகளையும் அல்லது வெள்ள பாதிப்பையும் சமாளிக்க பசுமை காரிடாரை அமைக்கலாம்.


சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

மினுமினுக்கும் கண்ணாடியை கட்டிடங்களில் பதிக்காமல், அதற்கு பதில் பசுமையான தோட்டங்களை உருவாக்கலாம். கட்டிடங்களில் வெப்பம் தங்காமல் இருக்க பெரிய ஜன்னல்களை அமைக்கலாம்.

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வைஷாலி தர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையைத் தழுவியது…

நன்றி - பின்டிரெஸ்ட்  

காலநிலை மாற்றம் பற்றிய கார்ட்டூன்களைக் காண....

https://www.huffpost.com/entry/niels-bugge-cartoon-award_n_5455509?ec_carp=5088152033987458138

#gallery/352590/1

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்