பேச்சில் முரண்பாடுகளைக் கொண்ட சைக்கோபாத்கள்-!

 













சைக்கோபாத்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். முக்கியமான கொலைக்குற்றங்களை செய்தவர்களைப் பற்றி அமேசானில் தட்டினால் ஏராளமான நூல்கள் உங்களுக்கு படிக்க கிடைக்கும். அதெல்லாம் அவர்களைப் பற்றி நமக்கு கூறப்படாத உண்மையொன்றைக் கூறும்.அவர்கள் நூல்கள் வெளிவந்து அல்லது வழக்கில் பிடிபட்டபிறகு சைக்கோபாத்களாக மாறினார்களா, அதற்கு முன்பே அப்படி இருந்தவர்கள்தான் என்பதுதான்.

உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் சைக்கோபாத்களால் மன உளைச்சலை அடைகிறார்கள். அழுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள், வேலையை விடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களது துறையில் உள்ள பல்வேறு சைக்கோபாத்கள் என அவர்கள் அறிந்த ஆனால் உலகம் அறியாத மனநல குறைபாடு கொண்டவர்கள்தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைகளை ஒருங்கிணைத்து பெற்றுத் தருபவர் இருப்பார். இந்த நபர் சரியாக இருந்தால் வேலை நடக்கும். எளிதாக என்பதை கூடவே சேர்த்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் வேலை தாறுமாறாக இருக்கும். இவர்களைப் பொறுத்தவரை யாருக்கும் நட்பாக இருக்க முடியாது. ஆனால் மேலே இருப்பவர்களின் குறியை நக்கி, தனக்கு கீழே இருப்பவர்களின் புட்டத்தை புதைத்து தள்ளி வாழலாம். சும்மாயில்லை. சந்தோஷமாக வாழலாம். இப்படி நிறைய பேர்கள் வாழ்ந்துவருகிறார்கள். தனது உயரதிகாரி அதிகாரம் இருந்தும் பயன்படுத்தாத மொண்ணையாக இருந்தால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும். உயரதிகாரி செய்யவேண்டிய அனுப்பவேண்டிய செய்திகளை இவர்களே அதிகாரத்துடன் எழுதி அனுப்புவார்கள். தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வர கீழுள்ள ஆட்களை கட்டாயப்படுத்துவார்கள். எந்த அளவு கீழ்மையான செயலுக்கும் செல்லத் தயங்காத ஆட்கள்.  தங்களுக்கு கீழுள்ளவர்களை நிற்க வைத்தே பேசுவார்கள். தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள். வசை பாடிக்கொண்டே இருப்பார்கள். பிறர் பற்றிய அவநம்பிக்கை பிரசாரத்தை செய்வார்கள். தன்னை உயர்த்திக்கொள்ள பிறரை தாழ்த்த என்ன செய்யலாம் என திட்டமிடுவார்கள்.

 இப்போது பால் என்ற உளவியலாளர் ஆராய்ந்த கார்ப்பரேட் வழக்கு ஒன்றைப் பார்ப்போம். இதில் உளவியலாளர் ஆராய்ந்த நபரின் பெயர், ஜேம்ஸ் என வைத்துக்கொள்வோம். ஜேம்ஸைப் பொறுத்தவரை அவரது படிப்பு ஒன்றாகவும் வேலைக்காக தயாரித்த ரெஸ்யூம் ஒன்றாகவும் இருந்தது. பிறகு அவர் அலுவலகத்தில் வந்தபோது அவரை அவரது தோற்றத்திற்காக பலரும் மதித்தாலும் பின்னாளில் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள செய்த செயல்கள், சுயநலமான முடிவு, பிறருடன் சண்டையிடுவது ஆகியவற்றால் அவருடன் பேசுவதை பலரும் தவிர்க்கத் தொடங்கினர்.

அலுவலக சந்திப்புகளுக்கு எந்த முன்தயாரிப்புகளும் இல்லாமல் வருவார். வருவதும் தாமதமாக வருவார். வந்து அவர் கொடுக்கும் ஐடியாக்களும் வார்த்தையில் கோட்டை கட்டுவார்கள் என்று சொல்வார்களே அந்த ரகமாக இருக்கும். பிரச்னைகளுக்கு பிறரை அடையாளம் காட்டுவார். தன்னை உளவியலாளரிடம் கடுமையான உழைப்பாளர், புத்திசாலி என அறிமுகப்படுத்திக்கொண்டார். இறுதியாக அவர், தனது மேலதிகாரி பற்றி நிர்வாக உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினார். அதில் பலரும் அவரது கருத்துகளை ஏற்றுக் கொண்டதால் ஜேம்ஸை வேலையில் இருந்து நீக்கவில்லை. அவருக்கு பதவி உயர்வும் கிடைத்ததது. பேசிய விஷயங்களை மாற்றிச் சொல்வது, பொய் பேசுவது, பிறரை மட்டம் தட்டி பேசுவது, பிறரது வேலைக்கான அங்கீகாரத்தை தானே பெறுவது, நம்பிக்கை துரோகம் செய்வது ஆகியவற்றில் ஜேம்ஸ்  திறமையானவராக இருந்தார். சைக்கோபாத் செக்லிஸ்டில் அதிக மதிப்பெண் பெற்றவர், நிறுவனத்தில் ஒரே ஆண்டில் இருமுறை பதவி  உயர்வு பெற்றார். ஒரு நிறுவனத்தில் இதுபோல குணம் இருப்பவர்கள் எளிதாக வெல்லுவதற்கு வாய்ப்பு அதிகம்.

வங்கியில் பணத்தை கொள்ளையடிப்பவர்களுகு அதிக ஆண்டுகள் சிறை தண்டனை உண்டு. ஆனால் அதேபோல கொள்ளையடிப்பதை நவீனமான வழியில் செய்யும் அலுவலக ஊழியர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு அபராதம் அல்லது பணி நீக்கம் எனும் தண்டனைகளே உண்டு. இதனால் மூளை உழைப்பு சார்ந்த திருட்டுகளை, தவறுகளை செய்பவர்கள் எளிதாக தப்பி விடுகிறார்கள்.

சைக்கோபாத்களைப் பொறுத்தவரை எளிமையாக பொய்யுடன் உண்மை கலந்து பேசி ஏமாற்றுவதால் பலரும் ஏதோ ஒரு இடத்தில் ஏமாந்து விடுவார்கள். இதற்கு உளவியல் ஆய்வு செய்பவர்களும் கூட விதிவிலக்கு கிடையாது. இவர்கள் பேச்சில் இருந்து நிறைய உண்மைகளை நாம் அறியலாம். அதாவது, தெளிவாக இருந்து சொல்லும் வார்த்தைகளை கவனித்தால் மட்டும். நிறைய பேர்களை கீழே தள்ளியிருக்கிறேன். அவன் தலையை அடித்து நொறுக்கவேண்டும். அவன், பொய் சொல்கிறான். சரி, தவறு என்ற விதிகள் மாறுபடக்கூடியவை. எனக்கான விதிகளை நான் கடைபிடிக்கிறேன் என ஒருவர் சொன்னாலே நீங்கள் சுதாரிப்பாக இருப்பது முக்கியம். இல்லையென்றால் நீசம் பின்னாடியே வரும். தவிர்க்க முடியாது.

பேசுவர் சொல்லும் முறையில் சிந்தனையில் பேசுவதில் நிறைய முரண்பாடுகள் இருக்கும். டெட் பண்டி, கிளிஃபோர்ட் ஆல்சன் ஆகியோர் இதுபோல நிறைய முரண்பாடுகளை தங்களது பேச்சில் கொண்டிருந்தனர். 

imges -fine art america

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்