எல்ஜியின் 5 ஜி வெரைட்டி!



Image result for 5g mobile


5ஜி போன் பராக்!

அடுத்தாண்டின் மத்தியில் 5 ஜி போன்களை உங்கள் விரல்கள் தேய்த்து விளையாடிக்கொண்டிருக்கும். ஸ்பிரிண்ட் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்து 5ஜி போன்களை விரைவில் தயாரிக்கவிருக்கிறது.
"புதுமைத்திறன் கொண்ட எல்ஜி எலக்ட்ரானிக்ஸூடன் இணைந்து 5ஜி போன்களை எங்களது நிறுவனம் தயாரித்து வழங்கும் அனுபவம் எங்களுக்கு ஆர்வமூட்டி வருகிறது" என்கிறார் ஸ்பிரின்ட் நிறுவன இயக்குநர் ஜான் ஷா. ஒவ்வொரு தலைமுறை போன்களும் முந்தைய தலைமுறை பொருட்களை விட ஆயிரம் மடங்கு வேகமாக இருக்கும். 5 ஜி இணைப்பில் 8 ஜிபி ஹெச்டி படத்தையும் ஆறே செகண்டில் தரவிறக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தட் இஸ் 5ஜி.  
5ஜி போன்களை வாங்கிவிட்டீர்கள். ஆனால் 5ஜி கனெக்‌ஷன் கிடைக்காதபோது என்ன செய்வீர்கள்? ஸ்பிரின்ட், வெரிஸோன், டிமொபைல், ஏடி அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் 5ஜி இணைப்பு தர ரெடியாக உள்ளன. உடனே இவ்விஷயங்கள் அமுலுக்கு வராது என்றாலும் 5ஜிக்கான ஆராய்ச்சியும் அதற்கான பொருட்களும் தயாரிப்பதில் டெக் நிறுவனங்கள் ஓவர்டைம் உழைப்பை கொடுத்து வருகின்றன.