கண்படாமல் அதிகரிக்கும் நைட்ரஜன்!







அபாய அளவில் நைட்ரஜன்!

கார்பன் வெளியீடு பற்றி உலகே பயந்துகொண்டிருக்க நைட்ரஜன் அளவு அபாயகர அளவை எட்டிக்கொண்டிருக்கிறது. கார்பன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் ஆகிய வேதிப்பொருட்கள் பூமியில் நாம் வாழ்வதற்கு அத்தியாவசியமானவை. வளிமண்டலத்திலுள்ள 78% நைட்ரஜனை நேரடியாக பயன்படுத்தமுடியாது. இதனை அம்மோனியம் அல்லது நைட்ரேட் அயனிகளாக்கி பயன்படுத்தலாம். தாவரங்கள் ஆக்சிஜன் மற்றும் கார்பன்டை ஆக்சைடை நேரடியாக உள்ளிழுக்கும் ஆனால் நைட்ரஜனை அப்படி செய்யமுடியாது.


மூன்று அணுக்களால் இணைக்கப்பட்ட நைட்ரஜன் உயர் வெப்பநிலையில் மட்டுமே உடையும். நீர்,நிலம், காற்று மூன்று இடங்களிலும் மனிதர்களின் பயன்பாட்டில் நைட்ரஜன் அளவு சத்தமின்றி அதிகரித்துவருகிறது. பாக்டீரியா  மூலம் நைட்ரஜனை உடைக்கலாம் அல்லது மின்னல் மூலம் நைட்ரஜனை ஆக்சிஜனுடன் இணைத்து நைட்ரஜன் ஆக்சைடாக மாற்றி பயன்படுத்தலாம். N,Nr என இருவகை நைட்ரஜன்கள் உண்டு. அம்மோனியா, அம்மோனியம், நைட்ரஜன் ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, நைட்ரேட் ஆகியவற்றோடு யூரியா, புரோட்டீன், நியூக்ளிக் அமிலங்களில் நைட்ரஜன் உண்டு. சீனா, வடஅமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் உரங்கள் மூலம் நைட்ரஜன் அளவு சூழலை சிதைத்து வருகிறது.