இந்தியாவை அச்சுறுத்திவரும் வெள்ளம்!






வெள்ளத்தில் மூழ்கும் இந்தியா!




உலகில் நிகழும் வெள்ளம் தொடர்பான மரணங்களில் ஐந்தில் ஒருவர் இந்தியர் என உலகவங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேலான மக்கள், வெப்பமயமாதலின் பிரச்னையை எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்கிறது உலகவங்கி.


1953-2017 காலகட்டத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் இறந்த மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 487 என்கிறது மத்திய நீர் கமிஷன் தகவலறிக்கை(மார்.19,2018) மழை, வெள்ளத்தில் இழப்பான பயிர்களின் மதிப்பு 3 லட்சத்து 65 ஆயிரத்து 860 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் இது 3%. குறைந்த நேரத்தில் பெய்யும் அதிக அடர்த்தியான மழை, வடிகால் வசதி, வெள்ளத்தை கட்டுப்படுத்தும் முறையற்ற அமைப்புகள் ஆகியவை காரணம் என ராஜ்யசபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுமேற்கு இந்தியாவிலுள்ள மங்களூரு, மும்பை, ஜூனாகர் ஆகியவை பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. உயிர்ப்பலி 30. தெற்கு ஆசியாவிலுள்ள கொல்கத்தா, மும்பை, தாகா, கராச்சி ஆகிய நகரங்களில் வாழும் 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளமும், வெப்ப உயர்தலும் பிரச்னையாக உருவாகும்