பிரம்மோஸ் பிரமிப்பு!

பிரம்மோஸ் சாதனை!

ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பாயும் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா சோதித்து வெற்றி கண்டுள்ளது. 290 கி.மீ தூர இலக்கை துல்லியம் பிசகாமல் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை உலகிலுள்ள எந்த ஆயுதமும் இடைமறித்து தாக்க முடியாது.

போர்விமானமான சுகோய் 30 MKI இல் பயன்படுத்தப்பட்டு வரும் பிரம்மோஸ் ஏவுகணையில் 300 கி.கி வரை வெடிமருந்துகளை எடுத்துச்செல்ல முடிவதோடு மலைக்குன்றுகளில் உள்ள இலக்கையும் எளிதாக தாக்கி அழிக்க முடியும்.  "தற்போது நடந்துள்ள சோதனை, பிரம்மோஸ் ஏவுகணையின் ஆயுளை அதிகரிக்கவும் புதிய எல்லைகளை தொடவுமே நடத்தப்பட்டது" என்கிறார் ஏவுகணை திட்ட இயக்குநர் சுதீர்குமார் மிஸ்‌ரா. இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்கான பெருமை.

பிரபலமான இடுகைகள்