பிரான்ஸ், இந்தியா இருநாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை!







முத்தாரம் நேர்காணல்

"பிரான்ஸ் மற்றும் இந்தியாவுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை உள்ளது"

அலெக்ஸாண்ட்ரே ஸீக்லர், பிரான்ஸ் தூதர்

வரலாறு மற்றும் அரசியல்ரீதியாக இந்தியாவோடு நீண்ட உறவுகொண்ட நாடு பிரான்ஸ். இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவுகளையும், உலக அரசியல் நிலையினையும் பற்றிப்பேசுகிறார் பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ட்ரே ஸீக்லர்.

இந்தியா-பிரான்ஸ் என இருநாடுகளிடையே உள்ள மொழி கலாசார வேறுபாடுகளை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

இந்தியா எப்படி தன் மரபான மொழி,உணவு, இலக்கியம், சினிமா வழியாக பல்வேறு கலாசாரங்களோடு ஜனநாயகத்தை காப்பாற்றுகிறதோ அதேபோல்தான் பிரான்சும். உலகமயமாக்க உலகிலும் நமக்கான கலாசார அடையாளத்தோடு உள்ளோம். இந்தியா முதல் அணுகுண்டை சோதித்தபோதும்(1998), கார்கில் போரின்போதும்(1999) நாங்கள் இந்தியாவை ஆதரித்தோம். இருநாட்டுக்குமிடையே மதிப்பு மற்றும் நம்பிக்கை அடிப்படையில் பயணித்துவருகிறோம்.

இருநாட்டு உறவுகளுக்கு இடைவெளியாக எதைக் கூறுவீர்கள்?
அரசியல்ரீதியான உறவு என்றாலும் மக்களுடன் இணைந்திருப்பதை இடைவெளியாக கூறலாம். சீன மாணவர்கள் பிரான்சில் 50 ஆயிரம் பேர் படிக்கின்றனர். ஆனால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் மட்டுமே. பெருமளவு பிரான்ஸ் மாணவர்கள் இந்தியப்பல்கலைகளில் பயில்வதும் எங்கள் அரசின் கனவு. கடந்தமுறை மேக்ரான் இந்தியாவுக்கு வந்தபோது பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பேசினார். பிரான்சில் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயில வாய்ப்பு என்பதே பிரான்சின் எதிர்கால இலக்கு.

திடீரென காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றீர்களே?

பிரான்ஸ் தூதர் காஷ்மீருக்கு செல்வது 20 ஆண்டுகளுக்கு பிறகு அதுவே முதல்முறை. காஷ்மீரிலிருந்து பிரெஞ்சு மக்களை சந்தித்தேன். ரமலான் தினத்திலும் தாக்குதல் நடந்தது கண்டிக்கத்தக்கது.
பிரான்சுடன் இந்தியா சோலார் திட்டத்தில் இணைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. ஜெய்தாபூர் அணுஉலை திட்டம் என்னவானது?
பாரிஸ் சூழல் ஒப்பந்தப்படி சோலார் ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்துள்ளது. அதிகப்படியான மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு சோலார் திட்டம் நிறைய பயன்களை எதிர்காலத்தில் வழங்கும். புதிய ஆறு இபிஆர் ரியாக்டர்களுடன் ஜெய்தாபூர் அணுவுலைத்திட்டம் விரைவில் நிர்மாணப்பணிகளைத் தொடங்கும்.

தென்சீனக்கடலில் போர்க்கப்பல்களை பிரான்ஸ் நிறுத்தியுள்ளது என்ன காரணத்திற்காக?
இந்தியக்கடலில் இந்தியாவும் பிரான்சும் இணைந்து பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளோம். இங்கு பத்து சதவிகிதம் பொருளாதார மையமாக உள்ளது. சட்டவிரோத கடத்தல், இயற்கை பேரழிவு, திருட்டு என பல்வேறு விஷயங்களுக்கு இந்தியா-பிரான்ஸ் இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட்டாளியாக தொடரும் என நம்புகிறேன்.

பாதுகாப்பு தொடர்பான உறவுகளை பற்றி கூறுங்கள்.
பிரான்ஸ் அரசு இந்தியாவுக்கு வெறும் ஆயுதங்களை மட்டும் தரவில்லை. அதனை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தையும் அளிக்கிறது. தாலஸ், சஃப்ரன்,எம்பிடிஏ ஆகியவை நெடுங்காலமாக இந்தியாவில் செயல்பட்டுவருகின்றன. தாலஸ் நிறுவனம் விரைவில் ரஃபேல் விமானத்திற்கான பாகங்களை உற்பத்தி செய்யவிருக்கிறது.

பிரான்சு செயலாளர் அண்மையில் சுதந்திரம், வளர்ச்சி, பாதுகாப்பு, செல்வாக்கு குறித்து குறிப்பிட்டார். இது குறித்து விளக்குங்கள்.

அகதிகள் இடம்பெயர்வை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் நாட்டு எல்லையை மூடி இதற்கு தீர்வு காணலாம். ஆனால் இடம்பெயர்விற்கான காரணத்தை அறிந்து நாடுகளுடன் ஒத்திசைவான தீர்வுகளை நாடுவதே எங்களது நோக்கம். வளர்ச்சிக்கு அர்த்தம், சோலார் திட்டம்.        



தமிழில்:.அன்பரசு
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்