முதலைகளை கொன்றழித்த பழிக்குப்பழி வன்மம்!

முதலைகள் படுகொலை!

இந்தோனேஷியாவின் பப்புவா பகுதியைச் சேர்ந்தவர் சுகிட்டோ. தன் வீட்டு பசுவுக்கு புற்களை பறிக்கச் சென்றவர் தவறுதலாக முதலைகள் பண்ணைக்குள் நுழைந்துவிட்டார். சீற்றமான முதலைகள் சுகிடோவை தாக்க படுகாயமுற்றவர் இறந்துபோனார்.

அவரின் இறுதி ஊர்வலத்தின்போது பழிவெறி மூளையில் ஏற, சுகிட்டோவின் உறவினர்கள் முதலைகள் பண்ணையை கத்தி, கடப்பாரை என ஆயுதங்களுடன் சூழ்ந்து வேட்டையாடி 300 அரிய முதலைகளை தாக்கி கொன்றுகுவித்தது உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் நான்கு இன்ச் முதலைக்குட்டி முதல்கொண்டு இரண்டு மீட்டர் வரை வளர்ந்த முதலைகளும் உள்ளடங்கும்

ஆத்திரம் தீராமல் போலீஸ் ஸ்டேஷன் வரை பேரணியாய் திரண்டு வந்த சொந்தபந்தங்களை முதலைப்பண்ணைத் தலைவர் பஷார் மனுலாங், சமாதானம் செய்து இழப்பீட்டிற்கு இசைந்துள்ளார்
:p>

பிரபலமான இடுகைகள்