சுதந்திரத்திற்கு தடை விதிக்கும் சீனா!








ஹாங்காங்கில் சுதந்திரத்திற்கு தடை!

ஹாங்காங்கைச் சேர்ந்த சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டும் தேசியக்கட்சியை தடைசெய்ய அரசு ஆலோசித்து வருகிறது. மிக குறைவான உறுப்பினர்களைக் கொண்ட தேசியக்கட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட இல்லாத கட்சி தொடங்கப்பட்டு இரு ஆண்டுகள்தான் ஆகிறது.

 கட்சித்தலைவரான சான் ஹோ-டின்னுக்கு ஹாங்காங் அரசு கட்சியை நடத்துவதற்கு பல்வேறு நெருக்கடிகளை முன்னர் அளித்தது. "தேசியபாதுகாப்பு, பொதுமக்களின் அமைதி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கட்சியை தடைசெய்ய யோசித்து வருகிறோம். குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு மட்டுமே கட்சிகள் இங்கு இயங்கலாம்" என்று பேட்டியளித்துள்ளார் ஹாங்காங்கின் பாதுகாப்பு செயலர் ஜான் லீ. பிரிட்டிஷ் காலனியாக ஹாங்காங் இருந்தபோது சீன கம்யூனிஸ்ட் கட்சி இங்கு தடைசெய்யப்பட்டு இருந்தது. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் கட்சிக்கு ஹாங்காங்கில் தடை விதிக்கப்பட இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.