செத்தது எத்தனை குழந்தைகள் - புள்ளிவிபரம் சொல்கிறார் அமைச்சர்
மூச்சுதிணறலால் குழந்தைகள் பலி!- கணக்குப்போட்டு வரும் அமைச்சர்
மகாராஷ்டிராவில்
கடந்த பதினொரு மாதங்களில் குழந்தைளின் இறப்பு பெருமளவு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை
அமைச்சர் தீபக் சாவந்த் தெரிவித்துள்ளார்.
தோராயமாக ஏப்.2017-பிப்.2018
வரையிலான காலகட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து
500 குழந்தைகள் நிமோனியா, குறைந்த எடை,
மூச்சுத்திணறல் தொடர்பான பிரச்னைகளுக்கு பலியாகியுள்ளனர். குறைந்த எடை காரணமாக மட்டும் 22 சதவிகித குழந்தைகள் மரணித்துள்ளனர்
என சுகாதார அமைச்சர் தீபக் சாவந்த் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். நிமோனியா மற்றும் தொற்றுநோய்களால் 7%, மூச்சுத்திணறலால்
14% என பிறந்த 28 நாட்களுக்குள் 65 சதவிகித குழந்தைகள் இறந்துபோயுள்ளனர். "2017-2018 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 778. இதில் மும்பையில் மட்டும் 483 குழந்தைகள் இறந்துள்ளனர்" என கூட்டிக்கழித்து பதில்
சொல்லியிருக்கிறார் அமைச்சர் சாவந்த். அரசுக்கு புள்ளிவிபரம்
சொல்வதை கைவிட்டு குழந்தைகளை காப்பாத்துங்க
அமைச்சரே!