இமோஜி பிட்ஸ்!


இமோஜி பிட்ஸ்!




என்டிடி டொகோமோ நிறுவன டிசைனர் ஷிகெட்டாகா குரிடா, இமோஜியின் தந்தை. இமெயிலை விட சிறியதாக பிறருக்கு தகவல் கூற பயன்படும் இமோஜியை குரிடா தனது டொகோமோ நிறுவனத்திற்காக உருவாக்கினார்.

பெப்சி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இமோஜியை வியாபாரத்திற்கென பயன்படுத்த தொடங்கிவிட்டன. உருவாக்கிய நிறுவனம் தட்பவெப்பநிலை பற்றிக்கூறவும் இமோஜியைப் பயன்படுத்தியது. ஹாம்பர்கர் உள்ளிட்ட நிறுவனங்களும் இமோஜியை பயன்படுத்தி வெற்றிகண்டன.

2016 ஆம் ஆண்டு ஜூலைப்படி அழும் இமோஜி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் புகழ்பெற்றதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. புகழ்பெற்ற இமோஜி என்பது நாட்டிற்கு நாடு மாறுபடும்.


1999 ஆம் ஆண்டு இமோஜியை குரிடா கண்டுபிடித்தபிறகு MoMA அருங்காட்சியகத்தில் அவை இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால கல்வெட்டு எழுத்துக்களோடு இமோஜியும் நவீனகால கண்டுபிடிப்பாக இடம்பெற்றுள்ளது