திபெத்தில் வேலை செய்யும் சீனா!
திபெத்தில் வானிலை
ஆய்வகம்!
திபெத்தின் எல்லையோரமாக
தானியங்கி தட்பவெப்பநிலை ஆய்வகத்தை அமைக்கும் முயற்சியில் சீன அரசு துணிச்சலாக இறங்கியுள்ளது. திபெத்தின்
அடிப்படை கட்டமைப்பை அப்டேட் செய்யும் முயற்சி இது.
எல்குன்ஸ் கவுண்டி
பகுதியிலுள்ள யுமாய் நகரருகே சீனா திட்டமிட்டு அமைக்கும் இந்த ஆய்வக முயற்சி, தரைப்படையின்
போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு விஷயங்களுக்கு எதிர்காலத்தில் உதவும். திபெத்தின் வானிலையை சரியானபடி அறிந்தால் மட்டுமே விமானங்கள் பறக்கவும் ஏவுகணைகளை
இலக்கு தவறாமல் வீசவும் முடியும். தன் முப்படை ராணுவப்பிரிவுகளை
சரியான தகவல் தொடர்பின்றி பிரித்து வைத்திருக்கும் இந்தியா இதற்கு பதிலடியாக என்ன செய்யப்போகிறது
என்ற கேள்வி மட்டுமே நம்மிடம் மிச்சமிருக்கிறது.