பாலஸ்தீனுக்கு உதவும் பில்ட் பாலஸ்தீன் அமைப்பு!







பாலஸ்தீனை உயிர்ப்பிக்க முடியுமா?

பாலஸ்தீன பகுதி மக்களின் வாழ்நிலையை மாற்ற க்ரௌடுசோர்ஸ் மூலம் பணம் சேகரித்து உதவி வருகிறார் டெரார் கனெம் என்ற இளைஞர். BuildPalestine அமைப்பின் வழியாக நீர் சிக்கனம் தொடங்கி சூழல் பாதுகாப்பு, ஒலிம்பிக் பயிற்சிக்கு உதவிகள் வரை மக்களிடம் பண உதவிகளைப் பெற்றுத்தந்து சாதித்து வருகிறார் டெரார் கனெம். பாலஸ்தீன தந்தைக்கும் கிரீக் -அமெரிக்க தாய்க்கும் ஏதேன்ஸில் பிறந்து ஜெனின் நகரில் வளர்ந்தவர் கானெம்.


 2016 ஆம் ஆணுட அபு ஜூதே, மஹ்ரான் இஸ்மாயில், கானெம் ஆகியோரின் கூட்டுறவில் உருவானது பில்ட்பாலஸ்தீன் அமைப்பு. உள்ளூர் பிரச்னைகளுக்கான தீர்வை பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள், உள்ளூர் நிர்வாகம், இனக்குழுக்கள் ஆகியோரின் கூட்டிணைவில் தீர்ப்பதே பில்ட் பாலஸ்தீன் அமைப்பின் நோக்கம். அயல்நாட்டு நிதியுதவிகளை சிலர் விமர்சித்தாலும் "நாங்கள் மக்களுக்கு உதவ விரும்புகிறோம்; வெறும் ஐடியாக்களுக்கு அல்ல" என்கிறார் கானெம். வெஸ்ட் பேங்கிடமிருந்து 2.4 பில்லியன் டாலர்கள் மேம்பாட்டு உதவியாக பாலஸ்தீனுக்கு கிடைத்துள்ளது. பில்ட் பாலஸ்தீன் அமைப்பு பதினேழு திட்டங்களுக்கு 1 லட்சத்து 26 ஆயிரம் டாலர்களை பெற்றுத் தந்துள்ளனர். பாலஸ்தீனில் பல்வேறு இசைக்கலைஞர்களின் மூலம் உலகளாவிய இசைத்திருவிழாவை நடத்துவதே கானெம்மின் கனவு

பிரபலமான இடுகைகள்