ஆதாரிலும் தவறுகள் உண்டு!








முத்தாரம் Mini

பொதுவிநியோகமுறை முதல் போன் கனெக்‌ஷன் வரை ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதில் பாதுகாப்பு உண்டா?

அடையாள முறை என்பது அதற்கான பிரச்னைகளைக் கொண்டுள்ளது. இதனை சரிபார்க்க கருவிகள், மின்சாரம் தேவை. இவை இல்லாதபோது நிலைமை மோசமாகிவிடும். எங்களுடைய ப்ரௌசர் மட்டுமல்ல உலகிலுள்ள பல்வேறு அமைப்புகளிலும் பாதுகாப்பு தவறுகள் இல்லாமலில்லை.

இணையத்தில் பேச்சு சுதந்திரமும் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. சமூகவலைதள பதிவுகளுக்கு அரசு தண்டனை அளிக்க சட்டங்களை உருவாக்கி வருவது ஆபத்தானது அல்லவா?

இணையச்சுதந்திரம் தாக்குதல்களாக்கி வருவது உண்மை. அவதூறான செய்திகளுக்கு இந்திய அரசு தண்டனைச்சட்டங்களை உருவாக்கி வருகிறது. பொது, தனியார் என பதிவுகளை பிரிப்பது சிக்கலான ஒன்று.

சீனா இணையத்தை ஒற்றைத்தன்மையுடையதாக்கி வீசாட் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்திவருகிறது. இது பற்றி உங்களது கருத்து?


அரசின் தலையீடு பற்றி உறுதியாக கூறமுடியாது. ஐரோப்பாவில் கூகுள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் மக்களின் பிரைவசி விஷயங்களில் தலையிட முடியாத சூழலையும் இதில் கருத்தில் கொள்ளவேண்டும்.

-Chris Beard,  மொசில்லா பவுண்டேஷன் தலைவர்

பிரபலமான இடுகைகள்