விண்வெளியில் புது முயற்சி!
விண்வெளி துறைமுகம்!
இங்கிலாந்து ஆற
அமர யோசித்து விண்வெளி துறைமுகம் அமைக்க முடிவெடுத்துள்ளது. ஸ்காட்லாந்தின்
சூதர்லாந்து இதற்கான ஸ்பாட்டாக இருக்கலாம். 2020 ஆம் ஆண்டு ஹைலண்ட்
அண்ட் ஐலண்ட் என்டர்பிரைஸ்(HIE) எனும் நிறுவனம் இதற்கான பணிகளை
செய்யவிருக்கிறது. இதற்கான செலவு 3.3 மில்லியன்
டாலர்கள்.
இந்நிறுவனத்தோடு
ஆர்பெக்ஸ் எனும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் அரசு நிதியுதவி அளித்து புதிய
ராக்கெட்டுகளை தயாரிக்க உதவி வருகிறது. ராக்கெட்டுகளை ஏவும் பணிக்காக லோக்கீது
மார்ட்டின் நிறுவனமும் இப்பணியில் உதவ இருக்கிறது. நானோசாட்டிலைட்
அல்லது க்யூப்சாட் எனும் சிறியவகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான இடமாக விண்வெளித்துறைமுகம்
அமையும். விலைகுறைவாக சிறிய செயற்கைக்கோள்களை தயாரிப்பதே இங்கிலாந்தின்
லட்சியம்."சிறியவகை ராக்கெட்டுகளை ஏவுதலில் இங்கிலாந்து
விரைவில் முன்னணி வகிக்க வாய்ப்புள்ளது" என்கிறார் லோக்கீது
மார்ட்டின் நிறுவனத்தின் இங்கிலாந்து இயக்குநரான பேட்ரிக் வுட்.