கருப்பின திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய நடிகர்!







திரையுலகை மாற்றிய நடிகர்!

கிங்காங்(1933) படத்தில் பழங்குடிகளின் தலைவராக நடித்த நோபல் ஜான்சன், முக்கியமான கருப்பின நடிகர். ஹாலிவுட்டின் நிறவெறி மனதிற்கு ஏற்றபடி சினிமாவில் பழங்குடி கேரக்டரை குறை கூறாமல் செம்மையாக செய்தார் நோபல் ஜான்சன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடித்த நோபல் ஜான்சன், அப்பணத்தின் மூலம் ஆப்பிரிக்க அமெரிக்க திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார்.

அமெரிக்காவின் கொலராடோவில் பிறந்து வளர்ந்த ஜான்சனின் தந்தை புகழ்பெற்ற குதிரை பயிற்சியாளர். சகோதரர் ஜார்ஜின் மூலம் திரைப்படத்திற்கு பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பழங்குடியாக நடிக்கும் நடிகர் வராமல் போக கிடைத்த வாய்ப்பில் பின்னி எடுக்க, அடுத்தடுத்து ஒன்பது படங்களில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. கருப்பினநடிகர்களை முன்னேற்ற லிங்கன் மோஷன் பிக்சர்ஸ் கோ.(LMPC) என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார் ஜான்சன். லாபத்தை விட கருப்பினத்தவருக்கு பெருமைதரும் விதமாக பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். அவை கருப்பினத்தவர் நடத்திய தியேட்டரில் வெளியாகி வரவேற்பு பெற்றன. பின் தன் திரைப்பட நிறுவனத்திலிருந்து விலகியவர்யுனிவர்சல் ஸ்டூடியோவின் படங்களில் குட்டி ரோல்களிலும் இறுதிவரை நடித்தவர் தனது 96 வயது வயதில் மரணித்தார்.