காற்று மாசுபாடில் முன்னேறும் இந்தியா!
மூச்சு திணறும்
்இந்தியா!
நவீன இந்தியாவின்
மாசடைந்து வரும் நகரங்களின் எண்ணிக்கைக்கும் வளர்ச்சி என்ற கோஷத்திற்கும் நெருங்கிய
தொடர்புண்டு.
உலகின் மாசடைந்த 25 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. பெய்ஜிங்கை விட இருமடங்கும்,
லண்டனைவிட பத்து மடங்கும் மோசமாக சூழலைக் கொண்டுள்ளது இந்தியாவின் தலைநகரான
டெல்லி.
ஆஸ்துமா, நிமோனியா,
இதயநோய்கள், வாதம், புற்றுநோய்,
ஆகியவற்றோடு சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கும் மாசுபாடு முக்கிய காரணமாக
உள்ளது. தற்போது புதிய ஆராய்ச்சியாக நீரிழிவும் இப்பட்டியலில்
இணைந்துள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளாக கிராமங்களை விட நகரங்களில்
நீரிழிவுநோய் பெருமளவு அதிகரித்துள்ளதோடு இதற்கான அடிப்படையாக காற்றில் மாசு மூலக்கூறுகளின்
அளவு PM 2.5(particulate matter) மடங்கு உயர்ந்ததன் காரணமாக கடந்த
8.5 ஆண்டுகளில் நீரிழிவு நோயும் அதிகரித்துள்ளதை வாஷிங்டன் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட
12mcg எனும் அளவும் தாண்டி காற்று மாசுபடுவது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில்
பல்வேறு நோய்களை உருவாக்க கூடும். குறைவான தனியார் வாகனப்போக்குவரத்து,
பயிர்கழிவுகளை நெருப்பிடுவது இவற்றோடு வணிக நிறுவனங்களை விதிகளின் மூலம்
நெறிப்படுத்துவதும் அவசியம்.