இங்கிலாந்து மேயரின் சாதனை ஆர்வம்!
உலகம் முழுக்க வெப்பமயமாதல் பற்றி அக்கறையும் பயமும் உள்ளது. இதன்பொருட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் உழைத்து வருகின்றனர். இதற்காக இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்ற மேயர் அசத்தலான காரியம் ஒன்றை செய்திருக்கிறார். வெப்பமயமாதல் பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடம் சொல்லித்தரவென ஆசிரியர்களை தொடக்கப் பள்ளியில் நியமிக்க இருக்கிறார்.
ஜேமி டிரிஸ்கோல் என்பவர் வடக்கு டைன் பகுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையில் சுற்றுச்சூழல் கல்வியை ஐ.நா அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கற்றுத்தர இருக்கிறார். இது மாணவர்களின் கல்வியை முழுமையாக்கும் என்கிறார் இவர்.
இம்முறையில் ஐம்பதிற்கும் மேலான ஆசிரியர்கள் , இப்பயிற்சியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். இந்தவகையில் சூழல் தொடர்பான கவனத்தை மேயர் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி: இகோ வாட்ச்