கனவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காதீர்கள்!
நேர்காணல்
ஜிம் அல் கலீலி, க்வாண்டம் இயற்பியலாளர்(சர்ரே பல்கலைக்கழகம், இங்கிலாந்து)
நீங்கள் வளரும்போது என்னவாக ஆசைப்பட்டீர்கள்?
நான் முதலில் கண்டுபிடிப்பாளராக மாறவே ஆசைப்பட்டேன். பிறகு ராக் இசைக்கலைஞனாக விரும்பினேன். கால்பந்து அணிக்கு விளையாட நினைத்தேன்.
நீங்கள் யாருக்கேனும் அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லுவீர்கள்?
நான் என் மனைவி ஜூலியைத் திருமணம் செய்தபோது எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. அதைப்பற்றி நான் பேசியபோது, நீ அதைப்பற்றி கவலைப்படாதே, உன் கனவுகளைப் பின்பற்றி செல். நாம் இந்த கஷ்டங்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் நான் முனைவர் படிப்பை படிக்க முடிந்தது. நான் பெற்ற பிறருக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையும் இதுதான்.
நீங்கள் செய்யும் பணியை எளிமையாகச் சொல்லுங்கள் பார்ப்போம்.
நான் ஒரு கண்டுபிடிப்பாளன். பயணியும் கூட. அறிவியல் முடிவுகளை சிந்தனைகளை மக்களிடம் கூற முயற்சிக்கிறேன். நான் ஒரு க்வாண்டம் இயற்பியலாளர். அவ்வளவுதான்.
உயிருடன் இருப்பவரோ இறந்தவரோ விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்கவேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைத்தான். சந்தேகமே வேண்டாம்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்தது எது?
சிக்கலான கான்செஃப்ட்டுகளை மக்களிடம் விளக்கிச்செல்வதே சந்தோஷமானதுதானே. இதைத்தவிர எழுதுவதும் எனக்குப் பிடித்தமானது.
நீங்கள் சிறுவயதில் மாணவராக இருக்கிறீர்கள். இப்போது சிறு வயது கலீலிக்கு என்ன அறிவுரை சொல்லுவீர்கள்.
உன்னை நம்பு. பிறரது அறிவுரையைக் கவனமாக கேள். ஆனால் எக்காரணம் கொண்டும் உன் கனவை விட்டுக்கொடுத்துவிடாதே!
நீங்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்?
காஸ்மோலஜிஸ்ட் கார்லோ ரோவில்லி எழுதிய நூலான ரியாலிட்டி இஸ் நாட் வாட் இஸ் சீம்ஸ் அண்ட் தி ஆர்டர் ஆப் தி டைம்.
நன்றி: நியூ சயின்டிஸ்ட்