அகதிகளை மரியாதையாக நடத்த கற்பது அவசியம் - சேட்டன் பகத்




Image result for indian army attack pepper spray for refugees



மியான்மரில் புத்த பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான ரோஹிங்கயா முஸ்லீம்களை கொடுமைப்படுத்தி இனப்படுகொலை முயற்சிகளை அரங்கேற்றினர். இதன் விளைவாக, வாழ வழியற்ற அம்மக்கள் வங்காளதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

அவர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் மிளகு ஸ்ப்ரே அடித்து விரட்டினர். உண்மையில் இந்த விவகாரத்தில் இந்தியா இப்படி நடந்துகொள்ளும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா. முக்கியமான விவகாரத்தில் இப்படி முதிர்ச்சியற்று நடந்துகொண்டது என்னை வேதனைப்படுத்தியது.

உலகம் முழுக்க போர்களால் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். சில நாடுகள் அகதி மக்களை ஏற்கின்றனர். உதாரணம்  -கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள். சிலர் தீவிரமாக அவர்களை ஏற்க மறுக்கின்றனர். உதாரணம் - ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகள்.  அவரவருக்கு ஏற்பதா, இல்லையா என்பதில் கருத்துகள் உண்டு. இந்தியா ரோஹிங்கயா முஸ்லீம்களை தங்க வைப்பதில் பெரிய பிரச்னை வந்துவிடாது.

ஏற்கனவே இங்கு 40 ஆயிரம் பேர் உள்ளனர் என்பது அரசுக்கு பிரச்னையாக இருக்காது. பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்றாலும் அரசு, அம்மக்களை இடம் கொடுத்ததோடு விட்டுவிடாது. ஏனெனில் இங்கு ஏற்கனவே தங்கியுள்ள இலங்கை மற்றும் திபெத் அகதிகளை அரசு கண்காணித்து வருகிறது. பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

வாழ வழியற்று வரும் மக்களை, இந்தியா அவமானப்படுத்தி வெளியேற்றுவது தவறானது. மேற்கத்திய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன வேறுபாடு? நம்மிடையே உள்ள கலாசார பன்மைதான். அகதிகள் விஷயத்தில் இந்தியா கவனமாக முடிவெடுக்கும் தேவை உள்ளது. ரோஹிங்கயா மட்டுமல்ல; எதிர்காலத்தில் அகதி மக்களின் பிரச்னைகளை சமாளிக்கவேண்டிய நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வெளியுறவுகளை இந்தியா இன்றே சரியாக உருவாக்குவது எதிர்கால பிரச்னைகளைச் சமாளிக்க உதவும்.

சேட்டன் பகத்தின் இந்தியா பாசிட்டிவ் நூலைத் தழுவியது. 

படம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா





  

பிரபலமான இடுகைகள்