மாற்றுப்பாலினத்தவரின் அம்மா இவர் - பிரெண்டா ஹோவர்டு

Image result for brenda howard


மாற்றுப்பாலின சாதனையாளர்கள்!

பிரெண்டா ஹோவார்டு

Image result for brenda howard




அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள பிரான்க்ஸ் பகுதியில் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு யூதக்குடும்பத்தில் பிறந்தார். இவரை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், நவீன மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்ததில் பிரெண்டா முக்கியமானவர். பல்வேறு பேரணிகளை அம்மக்களின் உரிமைகளுக்கான நடத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு காலமானார்.

சியோஸெட் பள்ளியிலும் மன்ஹாட்டன் கம்யூனிட்டி கல்லூரியிலும் படித்தார். நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றது. அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தவர், பெண்ணிய இயக்கங்களிலும் பங்கு பெற்றார்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளிலும், சங்கத்திலும் இடம்பிடித்தார். 1970 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கான முதல் பேரணியை நடத்தி அவர்களுக்கு அமெரிக்க அம்மா வானார். ஆம் மதர் ஆஃப் பிரைடு என்று இவரை அன்றும் இன்றும் நாளையும் உலகம் அழைக்கும். மேடமின் அர்ப்பணிப்பான உழைப்பு அப்படி.

பாலின உறவுகள் பற்றி மிக வெளிப்படையாக பேசி இயங்கியவர் புற்றுநோயால் காலமானார். மாற்றுப்பாலினத்தவருக்கான சட்டங்கள், பாதுகாப்பு, உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இவர். ஜூன் மாதத்தை பிரைடு என்று மாற்றியவர்களில் பிரெண்டாவும் அவரது சகாக்களான கிரெய்க் சூன்மாகர், ராபர்ட் மார்டின் ஆகியோர் முக்கியமானவர்கள்.





நன்றி: அவுட்.காம்.

தமிழில் வின்சென்ட் காபோ