கைகளைச் சுற்றிய பாம்பு - சாதிக்கயிறுகள் எதற்கு?





Image result for caste bands
thewire





இது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் இப்படி கைகளின் கயிறு பேண்ட் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? பத்தாண்டுகளுக்கு மேலாக இப்படித்தானே இருக்கிறது? எங்கள் சாதி பற்றி எங்களுக்கு பெருமை என்று பேசியது யாரோ அல்ல; நாளை இந்த சமூகத்தில் தலைமை தாங்கிச்செல்லக்கூடிய மாணவர் ஒருவரின் குரல்தான் இது. திருநெல்வேலி, தென்காசியில் சாதிக்கயிறுகளின் ஆட்சி அதிகம்.

அண்மையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகளில் நெற்றியில் திலகம்,  பொட்டு, சாதியைக் குறிக்கும் கலர் கயிறுகள், பேண்டுகள் கட்டிவரக்கூடாது என தடை விதித்துள்ளது. சாதியைச் சொல்லும் இந்தப் பெருமை முதலில் பெரியவர்கள் பையன்களுக்குக் கற்றுத்தந்தனர். இந்த நச்சு பள்ளிக்குள் புகுந்தது. இப்போது இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருந்த மாணவிகளும் தம் தலையில் கலர் ரிப்பன்களை சூடி சாதியை பிறருக்கு சொல்லத் தொடங்கி விட்டனர்.

மாணவர்கள் ஒழுங்காகப் பேசவும், நடக்கவும் தொடங்கும் முன்னரே சாதிப்பெருமைக்கான சுழலில் சிக்கி விடுகின்றனர். அவர்களது சாதியைச் சேர்ந்த தலைவர்களது புகழ் பாடத்தொடங்குகின்றனர். இதுதான் இந்த சாதி நச்சுப்பரப்புதலின் தொடக்கம் என்கிறார் சமூக செயற்பாட்டாளர் என் கார்த்திகேயன்.

தென்காசியில் தேவர், தலித் மோதல்கள் அதிகம். பள்ளிகளிலிருந்து சாதி பேதத்தை அரசியல் கட்சிகள் வளர்த்தெடுக்கின்றன. அதுதானே அவர்களுக்கு எதிர்கால லாபம் தரும்? இதன் விளைவாக பள்ளிகளில் அவர்களின் நண்பர்கள், சுயசாதி ஆட்களாகவே இருக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்டபிறகுதான் நட்பே வளருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த மோதலை இப்போது போலீஸ் ரோந்துப்படை கண்காணிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டிருக்கிறது. 2018ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர்கள் குழு இந்த சாதிப் பெருமிதத்தை அடையாளம் கண்டு ஆசிரியர்களும் இதனை ஊக்குவிப்பதை அறிக்கையாக பள்ளிக்கல்வித்துறையிடம் தாக்கல் செய்தபின்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருவரின் சாதிப்பெருமையை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் மத, சாதி சகிப்பின்மையை உருவாக்க முயற்சிக்கிறோம் என்கிறார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஷில்பா பிரபாகர். இப்படி அரசு அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகிக் கொண்டால் யார்தான் இந்த விஷயங்களைச் செய்வது? வானத்திலிருந்து தேவதூதர்கள் இனி பிறந்தால்தான் ஏதாவது நடக்கும் போல.


பச்சை - சிவப்பு - தேவேந்திரகுல வேளாளர்

மஞ்சள் - நீலம் - யாதவ கோனார்

நீலம் - சிவப்பு - அருந்ததியர்

மஞ்சள் - ஆரஞ்சு - தேவர், மறவர்

நீலம் - பச்சை - நாடார்

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா


ஆங்கில மூலம் - ஜெயா மேனன்