மனிதர்களை சோதிப்பதில் ஏன் தடைகள்?
மேரிலாண்டில் ஆராய்ச்சியாளர் சோதிக்கிறார் |
அறிவியல் சோதனைகளின் எதிர்காலம்?
புற்றுநோய்க்கு எதிராக நடைபெற்ற ஐந்து சோதனைகள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதன் பொருள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆய்வில் விரக்தி அடைந்துவிட்டார்கள் என்பதல்ல. மருந்துகளைச் சோதித்துப் பார்க்க நோயாளிகள் முன்வரவில்லை.
1975 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் பிழைக்க வாய்ப்பு குறைவு. இன்று அதன் சதவீதம் 36 மாக உயர்ந்துள்ளது. ஆனால் புதிய மருந்துகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் தடுமாறி வருகிறார்கள். காரணம், மனிதர்களின் உடல்களில் சோதிக்க சரியான ஏற்பாடுகளை இதுவரையிலும் செய்யவில்லை. இதனால் ஆராய்ச்சிகளை தொடங்கி முன்னேறினாலும் அதில் நிர்ணயித்த இலக்கை எட்ட முடிவதில்லை. காரணம், விலங்குகளைச் சோதித்து மனிதர்களை சோதிக்கும் நிலையில் நோயாளிகள் ஆய்வுகளுக்குக் கிடைக்கவில்லை. பின் எப்படி மருந்துகள் சந்தையில் கிடைக்கும்?
அரசின் விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. எனவே லெவைன் புற்றுநோய் கழகம், புற்றுநோய் ஆராய்ச்சி நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் அமெரிக்காவின் ஃஎப்டிஏவை அணுகி, விதிகளை தளர்த்த கோரியுள்ளன. இந்த ஆண்டு பைடன் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் மருத்துவச் சோதனைகளுக்கான தகவல்தளம்தான். அமெரிக்க அரசு கிளினிக்கல் டிரையல்ஸ்.ஜிஓவி என வலைத்தளத்தைக் கொண்டுள்ளது. இது ஆராய்ச்சிக்காக பதிவு செய்பவர்களுக்கு மட்டுமானது. இதில் நோயாளிகள் பற்றி விவரங்கள் இருக்காது.
1932-1972 வரை அலபாமாவில் நடைபெற்ற மருத்துவச்சோதனைகளின் சர்ச்சை பற்றிக்கூட நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் இதனை சட்டப்பூர்வமாக செய்யும்போது பாதிப்புக்கு இழப்பீடும் பெறலாம். எனவே, முறையாக விதிகளை உருவாக்கி பரிசோதனைகளை நடத்துவதே மருந்துகள் கடைகளில் கிடைக்கச்செய்யும் ஒரே வழி. பக்கவிளைவுகள் இல்லாத மருந்து உலகில் ஏதும் கிடையாது. எனவே அதனை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டால், புற்றுநோயாளிகள் பலரையும் நாம் இழக்கவேண்டிவரும். அதில் நம் அன்புக்குரியவர்களும் இருக்கலாம்.
நன்றி: Ozy - ian graber