நாசிப்படையினரின் கொடூரத்தை உலகிற்கு சொன்னவர்!



புத்தக விமர்சனம்




41817561




அறமே வாழ்க்கை!


அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் தொடங்கி ஆசான் ஜெயமோகன் வரையில் அறம் பற்றி பேசாத ஆன்மாக்கள் உலகில் கிடையாது. தந்தியில் நீங்கள் படிக்கும் சாணக்கியன் சொல் கூட இதேவகையான அறத்தை அரசரின் வழியில் சொல்லி வருகிறது. இந்த அறம் என்பது எப்படி தலைமுறைகள் வழியாக நமக்கு வந்திருக்கிறது என்பதை விளக்குகிறார் இந்த நூல் ஆசிரியர்.




42779084. sy475




மாறும் பணிச்சூழல்


இன்று நாம் தேடும் கூகுள் முதற்கொண்டு ஏ.ஐ.தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. பாருங்கள் இந்த வரிகளைக்கூட நான் தட்டச்சு செய்யவேண்டியதில்லை. இந்த வார்த்தையா என இனி கூகுள் சொல்லும். காரணம், ஏ.ஐ. திறன். அமெரிக்காவில் பணியாற்றிய ஆசிரியர், அங்கு எப்படி செயற்கை நுண்ணறிவு மனிதர்களை குறைந்த கூலிக்கு தள்ளுகிறது. இதன் வழியாக மனிதர்கள் எப்படி நேரத்தைப் பிடித்து தொங்காமல் எளிமையாக வாழலாம் என்பதைச்சொல்லுகிறார். இதனைக் கவனமாக படித்தால் எதிர்கால பணிச்சூழல் எப்படி இருக்கும் என ஊகித்துவிடலாம்.


36316835. sy475




கொடூரத்தின் சாட்சி

1940 களில் ஜெர்மனின் நாசிப்படையில் பணியாற்றிய ஒருவரின் கதை. அவர் எப்படி நாசிப்படையினரின் அட்டூழியங்களை நேசப்படையினருக்கு ஆதாரங்களுடன் திரட்டி கூறினார் என்பதைக் கூறுகிற நூல் இது. படியுங்கள் திகைத்துப் போவீர்கள்.


கா.சி.வின்சென்ட்

நன்றி: குட்ரீட்ஸ்












பிரபலமான இடுகைகள்