மக்களை படைப்பாளர்களாக்கியது இணையம்தான்! - புவன்ராம்
டிஜிட்டல் புரட்சி மக்களை மாற்றியது
யூடியூபில் செல்வாக்கான நபராக வலம் வருகிறார் புவன்ராம். 25 வயதில் பத்து லட்சம் நேயர்களைச் சம்பாதித்து விட்டார். இதுபோதாதா அவரிடம் பேச....
நீங்கள் யூடியூபில் எவ்வளவு செல்வாக்கானவராக திகழ்கிறீர்கள்?
நான் மக்களை பொருட்களை வாங்க வைப்பவராக என்னை நினைக்கவில்லை. காரணம், எனது வேலை பொழுதுபோக்காளராக, படைப்புகளை உருவாக்குபவர் என்றுதான் நினைக்கிறேன். வெளிப்படையாகச்சொன்னால், யாரும் இங்கே யாரையும் அடக்கி தன் விருப்பங்களைத் திணிக்க முடியாது.
டிஜிட்டல் புரட்சி நிறைய விஷயங்களை மாற்றியுள்ளதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. இன்று தவறான போலிச்செய்தி வலைத்தளத்தில் பரவுகிறது என்றால் உடனே அதனை யாரும் நம்புவதில்லை. உண்மையான செய்தி என்ன என்று இளைஞர்கள் அவர்களாகவே உணர்ந்துகொள்கிறார்கள். மக்களையும் படைப்பாளர்களாக மாற்றியது டிஜிட்டல் புரட்சிதான்.
பொருளின் தரத்திற்கு அதனைப் பரிந்துரைக்கும் பிரபலங்கள் முக்கியக் காரணம் என்று சொல்லலாமா?
நான் ஒரு ஷாம்பூவை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால் அதனை நான் பயன்படுத்தி இருக்கவேண்டும். மேலும் ஷாம்பூ என்பது அனைவரின் தலைமுடிக்கும் ஒன்றுபோல தீர்வைத் தராது. எனவே இந்த விஷயத்தில் கவனமாக செயல்படுவது அவசியம்.
படைப்பாளரும், வர்த்தக நிறுவனங்களும் இணைந்து வளருவதற்கான சூழல் இருக்கிறதா?
பெரும்பாலான யூடியூப் சேனல்கள் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொள்கின்றன. நான் எனக்கான கொள்கையோடு செயல்பட்டு வருகிறேன். இதில் இருவருக்கும் பரஸ்பர பயன்கள் உண்டு.
இதில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?
தினசரி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் நான் பதிவுகளை இடும்போது, நல்ல கான்செஃப்டை பதிவிடுங்கள். விளம்பரங்களை அல்ல என்று எழுதி அனுப்புவார்கள். அவர்கள் சொன்னதை நான் அப்படியே கடைபிடிக்க முடியாது.
நன்றி: ஃபோர்ப்ஸ் இந்தியா