நகரும் செர்னோபில் - ரஷ்யாவின் சூப்பர் திட்டம்!







வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் நிலங்களில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார்கள். அடுத்து அவர்களின் பார்வை ஆர்க்டிக் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அங்கு கனடா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் துண்டு போட்டு இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றன.

உச்சபட்சமாக கடுங்குளிர் நிலவும் அங்கு, அணு உலை ஒன்றை நகரும் விதமாக அமைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் பெயர் அகாடெமிக் லோமோன்சோவ். அணு உலை என்றால் அதற்கு உடனே மின்நிலையம் என்று சொல்லித்தானே எழுதுவார்கள். இதனையும் அப்படித்தான் கூறுகிறார்கள்.

இந்த அணுஉலை மூலம் 70 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை வைத்து ஒரு லட்சம் வீடுகளுக்கு தோராயமாக மின்வசதியை வழங்க முடியும்.

சாதாரணமாக நிலத்தில் அமைக்கும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை கண்காணித்து முறைப்படுத்துவதே கடினம். இதில் ஆர்க்டிக் பகுதியில் நகரும் விதமாக அணுமின் நிலையம் அமைப்பது சூழலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜன் ஹேவர்கேம்ப்.

ரஷ்யா உக்ரைனில் செர்னோபில் விஷயத்தில் பல தகிடுத த்தங்களைச் செய்தது. பாதுகாப்பு விதிகளைக் காற்றில் பறக்கவிட்டதால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்பு இன்னும் அங்கு உண்டு. இந்த லட்சணத்தில் ஆர்க்டிக் பகுதியில் அணு உலை அமைத்தால், அதற்கான எரிபொருளுக்கு என்ன செய்வார்கள்? கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டால் என்ன செய்வது என எச்சரிக்கிறார் சூழலியல் தொடர்பான பெலோனா பவுண்டேஷனின் அன்னா க்ரீவா.

க்ரீன்பீஸ் அமைப்பு தான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இதுவரை தரவில்லை. நாங்கள் ஜப்பானின் புகுஷிமா அணு உலை பாதிப்பை கவனத்தில் கொண்டு ஆர்க்டிக் உலையை உருவாக்கியுள்ளோம். நிலநடுக்கம் என எது வந்தால் இந்த உலை பாதிப்படையாது என அணு உலையை வடிவமைத்துள்ளவரான டிமிட்ரி அல்சியன்கோ கூறியுள்ளார்.

நன்றி: ஃப்யூச்சரிசம்