குழந்தை தொழிலாளர்களைப் பயன்படுத்தும் டெக் நிறுவனம்!






அமேசானின் அலெக்சா ரக டெக் ஐட்டங்களை உருவாக்க சட்டவிரோதமாக குழந்தைத் தொழிலாளர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் பயன்படுத்தி வருவது வெளியாகி உள்ளது.

சீனாவில் 1500 சிறுவர்கள் இம்முறையில் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை இன்டர்ன்ஷிப் என்ற பெயரில் ஆசிரியர்கள் சகிதமாக வந்து வேலை செய்து அப்பணத்தைப் பெறுகின்றனர். இது சீன தொழிலாளர்துறை விதிகளை மீறிய செயல் என தி கார்டியன் செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி சீனாவின் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பு, அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்படும் தொழிலாளர் கண்காணிப்பு அமைப்பும் ஆதாரங்களை திரட்டியுள்ளது. இச்செய்தி பற்றி ஃபாக்ஸ்கான், நாங்கள் பள்ளி மாணவர்களை ஓவர்டைம் மற்றும் இரவுகளில் வேலைபார்க்க வைப்பதை தவிர்ப்போம் என்று கூறியுள்ளது.

”முதலில் எட்டுமணிநேரம் என்றுதான் ஆசிரியர் கூறினார். ஆனால் பின்னர் பத்து மணிநேரம் வேலை என்று ஃபாக்ஸ்கான் மேலாளர்கள் மிரட்டுகின்றனர். வேலை செய்யாவிட்டால் உதவித்தொகை கிடைக்காது என அச்சுறுத்தலும் உள்ளது” என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர் ஒருவர். இதனையும் சீனாவைச்சேர்ந்த தொழிலாளர் அமைப்பு கூறியுள்ளது.

நன்றி: ஃப்யூச்சரிசம்