உடல் எடை குறைப்பில் ஆண்கள் எளிதாக வெற்றி பெறுவதற்கான காரணம்!

 




ஆண்/ பெண் உடல் எடை வேறுபாடுகள்





உடல் எடையைக் குறைப்பதில் உள்ள வேறுபாடுகள்

ஆண், பெண் என இருவருக்குமே உடல் எடையைக் குறைப்பதில் நிறைய வேறுபாடுகள் உண்டு, என்ன வேறுபாடுகள் என அறிய நினைத்தால், ஆண், பெண் இருவரது உடலிலுள்ள ஹார்மோன்களைப் பார்க்கவேண்டும். ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உள்ளது. இதன் விளைவாக, அவனுக்கு உடலில் தசைகள் உருவாகின்றன.

உடற்பயிற்சி, டயட், உணவுமுறை என வடிவமைத்து ஆண், பெண் என இருவருமே ஜிம்மில் பயிற்சிகளை செய்தாலும், ஆண்களுக்குத்தான் உடலில் வேகமாக எடை குறையும். பெண்களோடு ஒப்பிட்டால் இந்த மாற்றம் வேகமாக இருக்கும்.

காரணம், உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசையிலுள்ள ஆற்றல் எரிக்கப்படுவதேயாகும். ஆனால் பெண்களுக்கு எடை குறைப்பு சற்று கடினமாகவே இருக்கும். இதற்கு, அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணம்.

இந்த ஹார்மோன், இயற்கையில் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு பால் சுரக்க வசதியாக மார்பு, இடுப்பு, ஆகிய இடங்களில் கொழுப்பை சேமிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பி நிற்கும்போது, வளர்சிதை மாற்றம் மாறுதல்களுக்கு உட்பட்டு ஆண்களைப் போல பெண்களின் வயிற்றில் கொழுப்பு சேகரமாகத் தொடங்குகிறது. பெண்கள் உடலில் எடை கூடும்போது அவர்களின் உடல் வடிவம் பேரிக்காயைப் போல மாறுவதைக் கவனித்திருப்பீர்கள்.

எனவே, அவர்கள் ஆண்களைப் போல கடினமாக பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை. சற்று ஸ்மார்ட்டாக திட்டமிட்டு புரத உணவுகளை சேர்த்துக்கொண்டு பயிற்சி செய்தால் உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

ஆண்களின் உடலில் உள்ள கொழுப்பு சதவீதம் 18 -24

பெண்களின் உடலிலுள்ள கொழுப்பு சதவீதம் 25-31

ஆண்கள், உடல் பருமனாக இருக்கும்போது அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும். டெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவு குறைவாக இருக்கும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு, டெஸ்டிரோன் ஹார்மோன், ஈஸ்ட்ரோஜனாக மாறுவதுண்டு. இதன்மூலம் ஹார்மோன்கள் சமநிலை ஏற்படுகிறது. கூடுதலாக, நீரிழிவு, இதயநோய் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது. டெஸ்டோஸ்டிரோன் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால், ஈஸ்ட்ரோஜனாக மாறும் சூழ்நிலை குறைகிறது. அப்போது, உடல் கொழுப்பில் இருந்து ஈஸ்ட்ரோஜன் உருவாகிறது.

உடல் எடை குறைப்பில் முக்கியமானது. ஆண், பெண் ஆகியோருக்கு இடையில் உள்ள செரிமான வேறுபாடுகள். ஆணுக்கு வயிற்றில் செரிமான அமிலங்களின் அளவு அதிகம் என உணவு வல்லுநர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பெண்களுக்கு வயிற்றில் உணவு அதிக நேரம் இருப்பதால், மலக்கட்டு பாதிப்பு ஏற்படுவதோடு, எடை கூடும் சிக்கலும் அதிகரிக்கிறது. வயிற்றில் அதிகளவு வாயு உருவாகிறது. இதை ஐபிஎஸ் – இரிடபிள் பௌல் சிண்ட்ரோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் செரிமானப் பிரச்னைகளை அதிக கலோரிகளைக் கொண்ட வெளளை பிரெட், பாஸ்தா கட்டுப்படுத்துகிறது.

பெண்கள் தங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, உடல் எடையைக் குறைக்க முழுமையான தானியங்கள், பழங்கள், காய்கறிகள், அதிகளவு நீர் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். கோழிக்கறி, டோஃபு, பீன்ஸ், க்ரீக் யோகர்ட் ஆகியவற்றை உண்ணுவதை அதிகரிக்க வேண்டும். இவற்றில் புரதம் அதிகம் என்பதால், உடற்பயிற்சி செய்யும்போது உதவியாக இருக்கும்.

கோலன் டிராவர்ஸ்

டைம் வார இதழ்

https://pixabay.com/photos/belly-stomach-girl-woman-diet-3520191/

கருத்துகள்