பள்ளிகளுக்கு இடையே சண்டை - பாடம் எடுக்கும் பதினெட்டாம் படி!


Image result for pathinettam padi malayalam movie

Image result for pathinettam padi malayalam movie

பதினெட்டாம் படி - மலையாளம்
இயக்குநர் - சங்கர் ராமகிருஷ்ணன்

Image result for pathinettam padi malayalam movie


அரசு மாதிரிப்பள்ளி, காசு கொடுத்து படிக்கும் கிறிஸ்தவப் பள்ளி என வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட இரு தரப்புக்கும் இடையே நடக்கும் சண்டை, காதல், மோதல் அனைத்தும்தான் படம்.

மம்மூக்கா படிப்பை தினசரி வாழ்க்கையில் செய்யும் விஷயங்களாக சொல்லித் தந்து அரசுப்பள்ளி மாணவர்களை கரையேற்றுகிறார். படம் சுபம். இதை எதுக்குங்க நான் 2.30 மணிநேரம் பார்க்கணும்னு கேட்டா, அவங்களை ஞான் கொன்னு களையும். பின்ன நாங்க பாத்தோமுல்ல நீங்களும் பார்க்கணும் தம்பி.

கதையை அஷ்வின் என்ற பாதிரியார் - யெஸ் பிரிதிவி ராஜ் சொல்லத் தொடங்குகிறார். அவருக்கு ஊக்கமூட்டிய ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருக்கிறார். ஆனால் அங்கு பணக்கார மாணவர்கள் செய்யும் பிரச்னையில் பெண் மாணவி சிக்க, அதன் மூலம் மாணவர் தலைவரான அஷ்வின் நல்ல பெயரும் நாசமாகப்போகிறது. அதோடு ஜாய் என்ற ஆசிரியரின் உயிரும் விபத்தில் பலியாகிறது. இதன் விளைவாக அரசுப்பள்ளியில் அஷ்வின் சேர, முன்னமே பழிவாங்கும் வெறியில் உள்ள அம்மாணவர்கள் அவரை அடி பின்னி எடுக்கின்றனர். பின் ஒழுங்காக படித்து முன்னேறி சாதிப்பதுதான் கதை.

கம்யூனிஸ்ட் கட்சி, பள்ளிப்பருவ காதல், நாட்டியம் என மலையாளப்படத்தில் என்னென்ன வேணுமோ? அனைத்தும் குறைவற இருக்கிறது. ஆனால் சுவாரசியம் தவறுவது எங்கே என்று இயக்குநர்தான் தேடவேண்டும். அஹானா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள். நடிக்க எந்த சந்தர்ப்பமும் இல்லை. பரிதாபம்.


பார்க்க முடிந்தால் பாருங்கள் இல்லையென்றாலும் பிரச்னையில்லை. நல்ல படம் அடுத்த வெள்ளி வரும். காத்திருப்போம்.

- கோமாளிமேடை டீம்

நன்றி: பாலகிருஷ்ணன்







பிரபலமான இடுகைகள்