சிறந்த பெண் எழுத்தாளர்கள்- உலகை மாற்றியவர்கள்
சிறந்த பெண் எழுத்தாளர்கள்
முராசகி ஷிகிபு
ஜப்பானிய இலக்கியத்தில் இர் எழுதிய தி டேல் ஆப் கெஞ்சி என்ற நாவல் முக்கியமானது. இதனை இவர் 1021இல் எழுதினார். உலகில் எழுதப்பட்ட முதல் நாவல் களில் இதுவும் ஒன்று. ஐம்பத்து நான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் ஜப்பான் பேரரசர் ஒருவரின் மகனைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளரின் வாழ்பனுபவங்களும் இணைக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் உணரலாம். இந்த பெண் எழுத்தாளரின் இயற்பெயர் அறியப்படவில்லை. முராசகி ஷிகிபு எனது புனைவுப்பெயர்.
ஷின் சைம்டாங்
கவிதை எழுதும் இந்த பெண்மணி கொரிய சமூகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி வந்தவர். கவிதை, கலிகிராபி, ஓவியம், எம்பிராய்டரி என பல்வேறு கலைகளில் சாதித்தவர். பதினாறாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இதில் கல்வியாளர் யுல்கோக் ஒருவரும் அடக்கம். புத்திசாலி தாய் என பின்னாளில் புகழப்பட்டார்.
மேரி வோல்ஸ்டோன்கிராப்ட்
பிரிட்டிஷ் காலத்து சம உரிமை போராளி. பெண்ணியம் என்பதை சமூகத்தில் வலியுறுத்திப் பேசி ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி அவசியம் என்று வலியுறுத்தினார். விண்டிகேஷன் ஆப் தி ரைட்ஸ் என்ற பெயரில் இவர் எழுதிய நூல் முக்கியமானது. பிறர் பேசத்துணியாத கருத்துகளை புரட்சிகரமாக பேசிய இவரின் மகள்தான் பிராங்கன்ஸ்டைன் நாவலை எழுதிய மேரி ஷெல்லி.
ஜேன் ஆஸ்டின்
இவர் எழுதிய நாவல்கள் அனைத்துமே காலம் கடந்த செம்படைப்பாக கருதப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பெண்களின் வாழ்க்கையைப் பேசும் படைப்புகள் இவை. நடுத்தர மேல்தட்டு வர்க்க மனிதர்களின் வாழ்க்கையைப் பேசிய நூல்களை ஜேன் எழுதினார். இவர் தான் வாழும் காலத்தில் ஓரளவு அங்கீகரிக்கப்பட்டவர் என்று கூறலாம்.
மாயா ஏஞ்சலோ
கவிதை, கட்டுரைகள், ஏழு பாகங்களாக எழுதி வெளியிட்ட சுயசரிதை என இவரது நூல்கள் அனைத்துமே வாசகர்களால் கொண்டாடப்படுபவை. தனது இளமைக்கால வேதனை அனுபவங்களை ஐ நோ வொய் தி கேஜ்டு பேர்ட் சிங்க்ஸ் என நூலாக எழுதினார்.
ஆன்னி பிராங்
வரலாற்றில் முக்கியமான சம்பவங்களை டைரிக் குறிப்பாக எழுதி வைத்துவிட்டு சென்ற இளம்பெண். யூதர்களை அழித்தொழிக்கும் சம்பவங்களை இவர் டைரியில் குறித்து வைத்ததை பல்வேறு மொழிகளில் இன்று நாம் வாசிக்க முடியும்.
ஆன்னி, ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் 1929ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஓட்டோ பிராங்க். யூதக்குடும்பம் என்பதால் நாஜிக் கட்சியினரால் வேட்டையாடப்பனரர். 1933ஆம் ஆண்டு ஆன்னியின் குடும்பம் நெதர்லாந்துக்கு இடம்பெயர்ந்தது. ஆன்னி அங்கு ஆம்ஸ்டர்டாமில் கல்வியைத் தொடர்ந்தார். ஏராளமான நூல்களை படிப்பதோடு எழுத்தாற்றலும் கொண்டிருந்தார். டச்சு மொழியில் எழுதப்பட்ட ஆன்னியின் டைரிக்குறிப்பு அறுபது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு முப்பது மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது.
1940ஆம் ஆண்டு உலகப்போர் தொடங்கவிருந்த சூழலில் அமெரிக்காவிற்கு தப்பிச்செல்ல ஆன்னியின் குடும்பம் நினைத்தது . ஆனால் அது கைகூடவில்லை. 1942ஆம் ஆண்டு ஆன்னியின் பதிமூன்றாவது பிறந்தநாளுக்கு அவரது பெற்றோர் நூல்களை பரிசாக அளித்தனர்.
ஆன்னி தனது டைரிக்கு கிட்டி என்ற பெயர் வைத்திருந்தார்.
ஆன்னியின் பிறந்தநாளுக்கு பிறகு, அவரது குடும்பம் ஓட்டோவின் அலுவலகத்தின் கீழ் அறையில் வசித்தனர். உணவு, செய்திகளை நண்பர்கள் வழங்கி வந்தனர். அப்படி பதுங்கி இருந்தபோதுதான் ஆன்னி, டைரியில் தனது உணர்வுகள், காதல், குடும்பத்தின் நிலை ஆகியவற்றைப் பற்றி எழுதி வைத்தார். இவர்களின் பதுங்கு அறையை 1944இல் நாஜிக்கள் கண்டுபிடித்தபோது டைரி எழுதப்படுவது நின்றுபோகிறது.
ஆன்னியின் டைரி பாதுகாக்கப்பட்டு இன்று பிரசுரிக்கப்படுவதால், மனித வாழ்க்கை எந்தளவு முக்கியத்துவமானது, மோசமான அரசியல் கொள்கை எப்படி மனிதர்களை அழிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆன்னியின் குடும்பம் ஆஸ்விட்ச் வதை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது. பெர்கன் பெல்சன் முகாமிற்கு ஆன்னி கொண்டு செல்லப்பட்டார். அங்கு டைபஸ் நோயால் அவர் இறந்தார். அவரது அப்பா மட்டுமே குடும்பத்தில் ஒருவராக பிழைத்திருந்தார். அவரே ஆன்னியின் நூலை 1947இல் பிரசுரம் செய்தார். இந்த நூல் பிறகு உலகளவில் முக்கியமான நூலாக விற்பனையில் சாதனை படைத்தது.
ஜே.கே. ரௌலிங்
ஹாரிபாட்டர் நூல்களை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் கூட வார்னர் பிரதர்ஸ் தயாரித்து டேனியல் ரெட்கிளிப், எம்மா நடித்த படத்தைப் பார்த்து ரசித்திருப்பார்கள். ஹாரிபாட்டர் நூலை எழுதிய ரௌலிங், 1965ஆம் ஆண்டு பிறந்தார். புத்தகம் சூழ வாழ்ந்தவர் தனது முதல் கதையை ஆறு வயதில் எழுதினார். அம்மை நோய் வந்த முயல் பற்றிய கதை அது. வேலைக்கு செல்லும்போது காத்திருந்த ரயில் வர தாமதமானபோது கணநேரத்தில் மனதில் தோன்றிய கதைதான் ஹாரி பாட்டர். இந்தக்ததையை எழுதி ஏழு ஆண்டுகள் கழித்து பிரசுரமானது.
ஹாரிபாட்டர் நூல்களை தழுவி எட்டு படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்துமே வசூலில் சாதனை செய்தவைதான். ரௌலிங் இந்த நூல்களை எழுதி ஏராளமான விருதுகளை வென்றிருக்கிறார். எழுபது மொழிகளில் இ்வரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 450 மில்லியன் அளவுக்கு விற்பனையில் நூல்கள் சாதித்துள்ளன.
கணித சாதனையாளர்
ஹைபாடியா
தொன்மைக்கால அலெக்ஸாண்டிரியில் புகழ்பெற்ற பெண் கணிதவியலாளர் இவர். அலெக்ஸாண்டிரியாவில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் அன்று உலகம் முழுக்க புகழ்பெற்றிருந்தது. அன்றைய உலகில் முக்கியமான சிந்தனையாளர்களின் நூல்கள் இங்கு தொகுக்கப்பட்டிருந்தன.
கி.மு. 355இல் அலெக்ஸாண்டிரியாவில் இறந்த ஹைபாடியா. எகிப்தில் இருந்த இந்த நகரம் கல்விக்கு பெயர்போனது. தத்துவம் மற்றும் கணிதவியலாளரான தியோன் என்பவரின் மகள்தான் ஹைபாடியா. அன்றைக்கு தனது மகளை கல்வி கற்பிக்க தியோன் அனுப்பியதே புதுமையான ஒன்று.
தனது காலத்தில் புகழ்பெற்ற ஆசிரியர், சொற்பொழிவாளர், வானியலாளர், கணித வல்லுநராக ஹைபாடியா இருந்தார். இவர், நியோபிளாடோனிசம் எனும் த த்துவத்தை மாணவர்களுக்கு கற்பித்தார். அன்று இவரது வகுப்புகளுக்கு மாணவர்களி்ன் அதிகமாக வந்தது. எண்ணூறு ஆண்டுகளாக புகழ்பெற்றிருந்த அலெக்ஸாண்டிரியா பின்னாளில் மதச்சண்டை காரணமாக அழிவை சந்தித்தது. பிறநாடுகளில் இருந்து கூட இவரது த த்துவ உரைகளைக் கேட்க அறிவாளிகள், சிந்தனையாளர்கள் வந்தனர்.
கி.மு.415 இல் இவரது த த்துவங்களை வெறுத்த கிறிஸ்துவ மத வெறியர்கள் கூட்டம் பிஷப்பின் தூண்டுதலில் இவரை அடித்து உதைத்து இழுத்து சென்று கொடூரமாக வதைத்து கொன்றது.
100 women who made history book
கருத்துகள்
கருத்துரையிடுக