காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகள் தேவை!
ஜேன் ஃபாண்டா
jane fonda
stephanie zacharek
அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகை. இவரை விட இவரது பெற்றோருக்கு புகழ் அதிகம். ஹென்றி ஃபான்டா, பிரான்சிஸ் ஃபோர்ட் சீமோர் ஆகியோருக்கு பிறந்த பிள்ளை. பெற்றோர் தொழி்ல் நடிப்பு என்றாலும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டிவி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். கிரேஸ் அண்ட் ஃபிராங்கி என்ற தொடரை இந்த வகையில் குறிப்பிடலாம்.
ஜேன், 1970ஆம் ஆண்டிலேயே பூர்விக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். கூடவே, அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரையும் கூட தவறு என்று வாதிட்டார். தற்போது தன்னார்வ அமைப்பைத் தொடங்கி தன்னைபோல ஈடுபாடு கொண்டவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டம் நடத்தி சூழல் பிரச்னைகள் மீது கவனம் கொண்டு வந்தார். அதற்கு எதிர்வினையாக ஐந்துமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைபடுவதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர் போக்கி்ல் இயங்கி வருகிறார்.
காட்டுத்தீ காரணமாக பறவைகள் வலசை செல்ல முடியாது தவிக்கின்றன. பெரும்பகுதி பறவைகள் பாதை மாறி பாலைவனத்தின் பக்கம் பறந்து உடலில் நீர் அளவு குறைந்து இறந்துபோகின்றன. காட்டுத்தீ காரணமாக நியூ மெக்சிகோ, அரிசோனா பகுதிகளில் வானமே ஆரஞ்சு வண்ணத்தில் மாறிவிட்டது என கவலைப்படுபவர், 2018ஆம் ஆண்டு முதல் சூழல் பற்றி கவலைப்படத் தொடங்கினார். போராடத் தொடங்கினார். தற்போது, புற்றுநோய் சிகிச்சை எடுத்துவரும் எண்பத்தாறு வயதிலும் செயல்பாடுகளை நிறுத்தவில்லை.
வாட் கேன் ஐ டு? மை பாத் ஃபிரம் கிளைமேட் டெஸ்பைர் டு ஆக்சன் என்ற நூலை சூழல் பற்றி எழுதியுள்ளார். நாம் திரும்ப போக வேண்டும். அப்படி செய்வதன் வழியாக மாசுபாடுகளை குறைக்கலாம். இப்படி செய்ய அதீத தைரியமும், செயல்பாடுகளும் தேவை. நாம் அனைவருமே இப்படி இருக்கவேண்டியுள்ளது என்றார் ஜேன் ஃபாண்டா.
டைம் வார இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக