அமேஸிங் அமேஸான்!- அனைத்து தொழில்களிலும் அசத்துவது எப்படி?
ஆட்டிப்படைக்கும்
அமேஸான்!
ஒரே கம்ப்யூட்டர்
போதும். பஜாரில் அலைந்து திரியாமல் சல்லீசு காசில் பர்சேஸை வீட்டில் உட்கார்ந்தபடியே
முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம். சான்பிரான்சிஸ்கோவைச்
சேர்ந்த ரெய்ன்டிசைன் எனும் கம்பெனியின் புகழ்பெற்ற தயாரிப்பு லேப்டாப் ஸ்டேண்ட்(19
டாலர்). இன்று அந்த டிசைன் அமேஸானில் ரெய்ன் டிசைனைவிட
பாதி விலையில் கிடைக்கிறது.
"மிகச்சிறந்த பொருட்களை காப்பி
அடிப்பது அமேஸானின் வழக்கம்" என்கிறார் முன்னாள் அமேஸான்
பணியாளரான ரேச்சர் க்ரீர். இன்று அமேஸானின் மதிப்பு
740 பில்லியன் டாலர்கள். கூகுள்,ஃபேஸ்புக் குறிப்பிட்ட டெக் முயற்சிகளோடு நின்றுவிட அமேஸான் காய்கறிகள்,
டிவி, ரோபோக்கள், மேக கணியம்,
எலக்ட்ரானிக்ஸ், திரைப்படங்கள், தொலைக்காட்சி, உணவு டெலிவரி, இணைய
இசை என வணிகம் நீள்கிறது. இன்று அமேஸான் ரியல் எஸ்டேட் தவிர அனைத்திலும்
சுறா போல உள்நுழைந்து ஆக்ரோஷமாக போட்டியிட்டு சக நிறுவனங்களுக்கு பீதியூட்டிவருகிறது.
"இணையத்தில் நீங்கள் கிளிக் செய்ய யோசிக்கும் இடத்தை அமேஸான் கணித்து
தன் தொழிலை மேம்படுத்துகிறது" என அதிர்ச்சியூட்டுகிறார்
ரேச்சல். அமேஸான் ஆப் மூலம் ஒருவர் எங்கு வசிக்கிறார்,
என்ன விஷயங்களை இணையத்தில் மேய்கிறார் என்பதுவரை அமேஸான் அனைத்து தரவுகளை
சேமிக்கிறது. "அனைத்து தொழில்களிலும் அமேஸான் சாதிக்கும்
ரகசியம் இதுதான். வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்துகொண்டாலே வியாபாரி
ஜெயித்துவிடுகிறார் அல்லவா?" என்கிறார் வணிக பேராசிரியர்
விஜய் கோவிந்த்ராஜன்.
அமேஸான் பிற போட்டியாளர்களை
மட்டுமல்ல,
நியூக்ளியஸ் எனும் தான் நிதியளித்த 5.6 மில்லியன்
மதிப்பிலான அலெக்ஸா இயங்கும் டேப்லட்டையும் கூட தன் எக்கோ ஷோ கருவி மூலம் போட்டியிட்டு
முடக்கி வருகிறது."அமேஸான் எங்களை நகல் எடுத்து மார்க்கெட்டில்
ஜெயிக்க நினைக்கிறது." என்கிறார் நியூக்ளியஸ் நிறுவனத்தின்
துணை நிறுவனரான ஜோனாதன் ஃபிராங்கல். வோல் ஃபுட்ஸ் நிறுவனத்தை
வாங்கிய பொருட்களின் விலையைக் குறைத்து, பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்துடன்
இணைந்து மருத்துவ சேவைகளை தொண்டு நிறுவனமாக செய்ய தொடங்கியவுடன் மருத்துவசேவை நிறுவனங்களில்
பங்குகள் கீழிறங்க தொடங்கிவிட்டன.
அமேஸானின் Go கடைகள்
முழுக்க ஆட்களே இன்றி தானியங்கியாக இயங்கத் தொடங்கியுள்ளது சந்தையை மாற்றும் அடுத்த
முயற்சி. விற்பனையாளர்களை ஒழிப்பது மட்டுமல்ல அனைத்து வியாபாரங்களையும்
கையகப்படுத்தும் முயற்சியாக அமேஸானின் வியாபார கணக்குகள் மாறி வருகின்றன.