மாநில அரசு, மத்திய அரசு வரி பங்கீடு எப்படி முடிவாகிறது?
அறிவோம் தெளிவோம்!
வரிபங்கீடு!
அரசியலமைப்புச்சட்டம் 280 படி, மத்திய அரசு ஐந்துபேர் கொண்ட நிதிக்கமிஷனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கிறது. இக்குழு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கான வரிப்பங்கீட்டை அறிவிக்கிறது. மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்குமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுவது இங்குதான்.
15 ஆம் நிதிகமிஷன் 2020 ஆண்டு ஏப்ரல்
1 அன்று அமையவிருக்கிறது.
மாநில அரசின் உரிமை!
கல்வி, சுகாதாரம், நகரமேலாண்மை உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசுகள் அதிகம் செலவழிக்கின்றன. மையப்படுத்தல் முறையில் வரியை டெல்லியிலுள்ள மத்திய அரசு எடுத்துக்கொண்டு அதனை பங்கீடு செய்வதில் பிரச்னை உருவாகிறது.
தனிநபர் வருமானம் அதிகமுள்ள தமிழ்நாட்டில் பெறப்படும் வரி, வறுமையில் தவிக்கும் பீகாருக்கு செலவிடப்படுகிறது.
பிரச்னையின் தொடக்கம்!
1950 களில் சோவியத் ஸ்டைலில் நாட்டை நடத்திச்செல்ல முடிவெடுத்த பிரதமர் நேரு, திட்டக்கமிஷனை உருவாக்கி முதல் நிதிகமிஷன் பரிந்துரைகளையும் மீறி பணத்தை மாநிலங்களுக்கு அளித்தார்.
2014 ஆம் ஆண்டு பதவியேற்ற பாஜக அரசு, திட்டக்கமிஷனைக் கலைத்துவிட்டது. தனிநபர் வருமானம்,
மக்கள்தொகை, வனப்பரப்பு ஆகியவை இதில் அடிப்படை.