ஓவியத்தில் போலி!



Image result for forgery paintings





வரலாற்று சுவாரசியங்கள்

ஓவியத்தில் போலி!

ரா.வேங்கடசாமி

ஹங்கேரியைச் சேர்ந்த எல்மையர் டி ஹோரி, ஓவியங்களில் போலி உருவாக்கிய பிதாமகன். 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஓவியம் வரைவதில் சிறுவயதிலேயே அபார திறமை கொண்டிருந்தார். தன் பதினெட்டு வயதில் புதாபெஸ்ட் நகரிலிருந்த ஓவியக்கல்லூரியில் படிக்க சென்றார். பின்னர் பெர்னான்ட் லெக்கர் என்பவரிடம் ஓவியப்பயிற்சி பெற்ற ஹோரி, கடும் ஏழ்மையில் சிக்கி பாரீஸ் நகரத்திற்கு 1945 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். அங்கு சிரமமான வாழ்க்கைதான். ஒருநாள் ஒரு பெண்ணின் தலையை சில கோடுகளால் வரைந்துகொண்டிருந்தபோது அறைக்குள் வந்த கார்பந்தய வீரரான மேல்சன் சேம்பலின் மனைவி, ஹோரியின் ஓவியத்தை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார்.


பிக்காஸோ ஓவியங்கள் அப்போது நல்ல கிராக்கியாக விற்றுக்கொண்டிருந்தன என்பதால், அதைப்போலவே வரைந்து ஓவியங்களை விற்பனை செய்து பிழைப்பை ஓட்டிவந்தார் ஹோரி. நண்பர் ஜூல்ஸ் சேம்பர்லினிடம் இது பற்றிக்கூற அவரது தந்தை மூலமே ஓவியங்களை விற்கத்தொடங்கினார் ஹோரி. ஆனால் பணவிஷயத்தில் முட்டிக்கொள்ள அக்ரிமெண்ட் காலாவதியானதுபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ செல்ல அங்கு சிறந்த ஓவியன் என பெயர் பெற்றார். பின் அங்கிருந்து நியூயார்க்குக்கு வந்து பிக்காஸோ, மேட்டிஸ், ரெய்னர் போன்றவர்களின் ஓவியங்களை நகல் செய்ய செம விற்பனை. ஆனால் பிராங்கி பெர்ல்ஸ் என்ற வியாபாரி ஹோரியின் டூப் வேலையைக் கண்டுபிடிக்க ஆர்டர்கள் கேன்சல் ஆனது. அதேநேரத்தில் சம்பாதித்த பணத்தை பெண்களின் மெழுகு தேகத்தில் செலவு செய்தார் சிருங்கார ஓவியர் ஹோரி. ஆனால் அமெரிக்காவில் தங்கியிருக்க அடையாள அட்டை இல்லாததால் அங்கிருந்து உடனே வெளியேறியவர், மீண்டும் ரேனல் என்ற பெயரில் உள்ளே நுழைந்து பல லட்சம் டாலர்களை சம்பாதித்தார்.

அப்போது பெர்டிணாண்ட் லெக்ராஸ் என்ற பிரெஞ்சுகாரருடன் வியாபாரத்தில் கூட்டு சேர்ந்தது பின்னாளில் பெரும் பாதகத்தை ஏற்படுத்தப்போகிறது என ஹோரி அன்று அறியவில்லை. 40-60% என வியாபாரம் செய்ய ஒப்புக்கொண்டனர் இருவரும். பின் எப்போதும்போல இருவருக்கும் முட்டிக்கொள்ள, ரோம் நகருக்கு சென்ற ஹோரி ரோம் நகருக்கு இடம்பெயர்ந்தார். பெயரும் ஜோசப் பௌடின் என மாறியது. அங்கே எதேச்சையாக லெக்ராஸை மீண்டும் சந்தித்தார் ஹோரி.