பேசும் சுவர்!



  1. Image result for censor wall




பேசும் சுவர்!

உங்கள் அறையின் சுவர் காலையில் உங்களுக்கு ஹலோ சொன்னால் எப்படியிருக்கும்? கார்னகி மெலன் பல்கலைக்கழகமும் டிஸ்னி ஆராய்ச்சியகமும் உருவாக்கியிருக்கும் கான்செப்ட் இதுதான்.


எலக்ட்ரோட்-லேடன் கோட்டிங் மூலம் சுவரை உயிருள்ளதாக மாற்றும் ஆராய்ச்சி இது. சுவரில் மனிதர்களின் தொடுதலை உணர்ந்து கொள்ளவும், கருவிகளை இயக்கச்செய்யவுமான ஆராய்ச்சியாளர்களின் நெடுநாளைய கனவு இது. டையமண்ட் வடிவில் எலக்ட்ரோடுகளை வைத்து சுவரில் இரண்டு கோட்டிங் லேடக்ஸ் பெயிண்டை பூசினால் போதும். ஐபோனின் டச் ஸ்க்ரீன்போல சுவர் மாறுவதால், இதிலிருந்து லைட்டுகளை ஆன் செய்து ஆஃப் செய்யலாம்."அறையிலுள்ள பெரும்பான்மையான பரப்பான சுவரை பயன்படுத்துவதற்கான முயற்சி இது. எதிர்காலத்தில் இது முக்கியமான கண்டுபிடிப்பாக மாறும்" என்கிறார் ஆராய்ச்சியாளரான கிறிஸ் ஹாரிசன்

பிரபலமான இடுகைகள்