டாய்லெட் கட்டினாத்தான் சம்பளம் போடுவோம்!



July 2016 News - Eyewaysigns Blog





ஆண்களின் குடும்பம்!

அமெரிக்காவின் மிச்சிகனைச்சேர்ந்த குடும்பம் சாதனை படைத்து உலகையே பிரமிக்க வைத்திருக்கிறது. அப்படியென்ன சாதனை? குழந்தை பெறுவதுதான்.

அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகளான ஜே, கடெரி ஸ்வாந்த் ஆகியோருக்கு அண்மையில் குவா, குவா அழுகையில் ஆண்குழந்தை பிறந்தது. உடனே அவசரப்பட்டு வாழ்த்துக்கள் சொல்லாதீர்கள். இது அவர்களின் பதினான்காவது ஆண் வாரிசு. இந்தியாவில் ஆண்குழந்தைக்கு தவிக்கிறார்கள் என்றால் இக்குடும்பம் பெண்ணுக்காக தவித்து பதிமூன்று ஆண்களை பெற்றெடுத்து தற்போது அதற்கடுத்த குழந்தைக்கும் பர்த்டே பாட்டு பாடிவருகிறது. "பெண் குழந்தைக்கான போராட்டம் போதும். இனி என் பிள்ளைகளுடன் சந்தோஷமாக ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடி வாழ்வேன்" என்கிறார் ஜே. பதிமூன்றாவது குழந்தை பிறந்தபோது இதே வார்த்தையைத்தான் ஜே சொல்லியிருந்தார் என்பது உலகின் கவனத்திற்கு...

2


96 வயது பள்ளிமாணவி!

இருபது ஆண்டுகள் படித்து டிகிரியை வாங்குவதற்குள் யூத்களுக்கு வாயில் நுரை தள்ளிவிடுகிறது. இந்த லட்சணத்தில் 96 வயதிலும் படிக்கும் மெக்சிகோ பாட்டியைப் பற்றி என்ன சொல்ல?

மெக்சிகோவைச் சேர்ந்த குவாடலூப் பேலசியஸ், தன் 96 வயதில் பள்ளிக்குச் சென்று வருகிறார். கல்யாணவீடு, நாயகி சீரியல்களை ஈஸிசேர் போட்டு பார்க்கும் வயதில் பள்ளிக்கு எதற்கு? பள்ளிப்படிப்பை முடிக்கும் ஆசைதான் காரணம். சிறுவயதில் வறுமையால் படிக்கமுடியாமல் விவசாய பண்ணை வேலைக்கு சென்ற பேலசியஸூக்கு இரு திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உண்டு. 2015 ஆம் ஆண்டு தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர், மேல்நிலைப்படிப்புக்கு பள்ளியில் வந்து சேர அரசு கூறியதால் பள்ளி யூனிபார்மோடு வந்து வேதியியல், கணக்குபாடத்திற்கு குறிப்புகள் எடுத்து படித்துவருகிறார் 'டோனா லுபிடா' என்ற செல்லப்பெயர் கொண்ட மெக்சிகோ பாட்டி.


டாய்லெட் இல்லையா? சம்பளம் கட்!

டாய்லெட் கட்டச்சொல்லி அரசு பிரசாரம் செய்து சலித்து தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளது. யெஸ். சம்பளம் கட் செய்வதுதான் அது.

ஜம்மு காஷ்மீரில், கழிவறை கட்டாத ஊழியர்கள் 643 பேரின் சம்பளத்தை நிறுத்திவைத்துள்ளது மாநில அரசு. கிஸ்ட்வார் மாவட்டத்தின் பாடர்வேலி பகுதியில்தான் இந்த அதிரடி. "பதினைந்து நாட்களுக்கு முன்பே ஊழியர்களுக்கு இதுகுறித்து அறிவித்தும் கழிவறை கட்டாத ஊழியர்களின் சம்பளம் நிறுத்தபட்டுள்ளது" என்கிறார் மாவட்ட வளர்ச்சி கமிஷனரான அங்கிரீஷ்சிங் ராணா. அரசு 45 ஆயிரம் கழிவறைகளை அமைக்க முடிவு செய்தும் 27 ஆயிரம் கழிவறைகளை கட்ட முடிந்தது ஏற்படுத்திய சங்கடம்தான் இந்த அதிரடிக்கு காரணம். "வறுமையில் உள்ளவர்களுக்கு 12 ஆயிரம் மானியம் கொடுத்து கழிவறைகளை அமைக்க கூறினோம். நல்ல சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் ஏன் கழிவறைகளை அமைக்க மறுக்கிறார்கள்? கழிவறைகளை அமைத்தால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் " என்கிறார் அங்கிரீஷ் ராணா. சோறு தின்னாதானே டாய்லெட் யூஸாகும் ராணா சார்!
  





பிரபலமான இடுகைகள்