ரம்ஜான்!
ரம்ஜான்!
இஸ்லாமிய லூனார் காலண்டர்படி ரம்ஜான் என்பது ஒன்பதாவது மாதம். ரம்ஜான் நோன்புக்கான நேரம் ஆண்டுதோறும் மாறிவரும். இந்த ஆண்டு மேமாத மத்தியில் ரம்ஜான் வருகிறது. அடுத்த ஆண்டு மே மாத தொடக்கத்தில்தான் ரம்ஜான் வரும்.
இஸ்லாமின் ஐந்து தூண்களின் ஒன்றான நிகழ்வு ரம்ஜான். உண்ணாநோன்புடன் தினசரி பிரார்த்தனை இதில் முக்கியம். சூரியன் உதயம் - மறைவு வரை நோன்பிருப்பதோடு, உடலுறவு ஆகியவற்றை தவிர்த்து இறையை தொழுவது அவசியம். நோன்பு இறைவனை நெருங்குவதற்கான வாய்ப்பாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். இதில் நோயாளிகள், பயணம் செய்பவர்கள் நோன்பிருக்க அவசியமில்லை. நோன்பிருக்க இயலாதவர்கள் கையில் பணமிருந்தால் பசியில் தவிப்பவர்களுக்கு உணவு வாங்கி வழங்கலாம். நோன்புக்கான பலன்களை அன்னதானமும் வழங்கும்.
நோன்பும், இரவு நேர பிரார்த்தனையும் உடலையும் உள்ளத்தையும் இறைவனைக்காண்பதற்காக தயார்படுத்தும் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கை.