ஜின்பிங்கின் புதிய சீனா!



Image result for jinping xi illustration



ஜின்பிங்கின் புதிய சீனா!

சீனாவின் பொருளாதாரம் குறித்த முடிவுகளை எடுக்கும் திறனை பெற்றுள்ளார் நாட்டின் நிரந்தர அதிபரான ஜின்பிங்.

கடந்தாண்டில் மட்டும் 13.15 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார். சேவைத்துறை, உற்பத்தித்துறை, எந்திரவியல்துறை மற்றும் தொழில்நுட்பத்துறையிலும் புலிப்பாய்ச்சல் காட்டியுள்ளது சீனா.

ராணுவத்தின் ஆதிக்கத்தை குறைப்பதோடு ஆட்களின் எண்ணிக்கையையும் 3 லட்சமாக குறைக்க முடிவு செய்திருக்கிறார் ஜின்பிங்.

ஜின் பிங்கின் அரசை வழிநடத்துவதில் ஐந்து நபர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஜெனரல் ஜூ குலியாங், வாங் ஹூனிங், வாங் குஷன், லீ ஸான்சு, லியூ ஹெ ஆகியோர் சீன அதிபரின் தளபதிகள்.

முன்னாள் விமானப்படை கமாண்டரான ஜெனரல் ஜூ குலியாங், ராணுவக்கமிஷனின் துணைத்தலைவர். அறிக்கை, கருத்தியல்களை உருவாக்கும் வான் ஹூனிங், ஏழுபேருள்ள கட்சியின் உறுப்பினர். சீனாவின் துணை அதிபரான வாங் குஷன், ஊழல் எதிர்ப்பு திட்டத்தின் பொறுப்பாளர். பொருளாதாரத்தில் தேர்ந்த லியூ ஹே 25 உறுப்பினர்கள் உள்ள அரசியலமைப்பு குழுவில் பணிபுரிகிறார். லீ ஸான்சு, ஜின்பிங்கின் முப்பதாண்டு நண்பரும் கட்சி உறுப்பினருமாவார்.

பிரபலமான இடுகைகள்